பக்கம்:வீடும் விளக்கும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விடும் விளக்கும் பதிகள் (rேத்திரங்கள்) தோறும் சென்று நன்னீர் (தீர்த்தம்) ஆடியும் கடவுளை வணங்கியும் வரலா னாள். ஒரு நாள் இராமேசுவரத்தை நோக்கிப் புகை வண்டியில் சென்றுகொண்டிருந்தாள். உடம்பில் விலை யுயர்ந்த பட்டுப் புடவை. அதனோடு பன்மணிகளால் (நவரத்தினங்களால்) செய்யப்பட்ட அணிகலன்கள் சுமையைத் தந்துகொண்டிருந்தன. கூந்தலில் மண மிக்க பூ திகழ்ந்தது. முகத்தில் பூசப்பட்டுளது மஞ்சள். நெற்றியில் இடப்பட்டுளது பொட்டு. இவ்வள விருந்தும் பார்வையில் சிறிதும் சுறுசுறுப்பில்லை. பேச்சில் எடுப்பில்லை. உதடுகளில் சிறு புன்முறுவலும் தோன்றவில்லை. சுருங்கக் கூறின் முகம் தெளிவின்றிச் சோர்வுற்றிருந்தது. உள்ளத்தில் பெருங்கவலை யொன்று உள்ளதென்பதை அறிவித்து நின்றது. 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா? அப் பெண் தன் எதிரில் நடக்கும் காட்சியொன்றைக் கண் டாள். கண்டு சற்றுப் பொறாமையும் வருத்தமும் கொண்டாள், அக்காட்சிதான் என்ன? ஓர் ஏழைப் பெண். தலை புரண்டுள்ளது. உடம் பிலோ கிழிந்த அழுக்குப் புடவை. காதுக்கும் முக்குக் கும் அணிகலம் குச்சுகளே. ஆனால் அவள் பார்வையில் சுறுசுறுப்பும் பேச்சில் மிடுக்கும் காணப் பட்டன. சிரிப்புக்கோர் எல்லையில்லை. முகத்தில் பெரியதொரு விளக்கம் காணப்பட்டது. ஒரு வயது குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்கத்தில் மூன்று வயதுப் பெண்ணும், மற்றொரு