பக்கம்:வீடும் விளக்கும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வீடும் விளக்கும் குட்டி உண்டா? என்பதே அவர்தம் முதல் கேள்வி. அப்பேற்றினையே இன்றியமையாதனவாகக் கருது கின்றார்கள். எனவே வீட்டை விளக்கும் பெண்கட்கு விளக்கம் பிள்ளைகளே என்பது மறுக்கமுடியாததோர் உண்மையாகும். சிறப்புரிமை: பிள்ளைகள் விளக்கம் அளிப்பது பெண்கட்கு மட்டுமா? ஆண்கட்கும் விளக்கம் அளிக்க வில்லையா? என்ற கேள்விகள் இங்கு முன்னிற்கின்றன. ஆம் உண்மைதான். ஆண்கட்கும் விளக்கமே. ஆயினும் பெறுமுரிமை, வளர்க்கும் உரிமை முதலிய இயற்கைச் சிறப்புரிமைகளை நோக்கிப் பெண்களின் விளக்காகப் பாராட்டுவதே பெரிதும் வழக்கம். ஆண்களினும் பெண்களே தமக்குப் பிள்ளை பிறக்கவேண்டும் என ஆவல் மிகுதியும் அடைகின்றார்கள் ஆண்கள் ஆவல் அடைவதில் அப்படியொன்றும் வியப்புள்ள தாகத் தோன்றவில்லை. ஏனெனில், ஆண்கட்கு அதனால் ஒருவகைத் துன்பமும் இல்லையல்லவா? பெண்கட்கோ அப்படியில்லை. பத்துத் திங்கள் (பத்து மாதம்) கருவுற்றிருக்கும் துன்பம் (கர்ப்பச்சுமை), பொறையுயிர்க்கும் துன்பம் (பிரசவவேதனை) என்னும் இரண்டால் தாக்கப்பட்டுப்பிள்ளையைப் பெறுகின் றார்கள். மேலும் குழந்தைக்காகத் தாம் மருந்துண் கின்றார்கள். குறிப்பிட்ட உணவை (பத்தியம்) உண் கின்றார்கள். தூக்கம் கெடுகின்றது. இன்னும் பலவகையிலும் தன்னலமற்று வாழ்கின்றார்கள். உடல் நலம் அறவே கெட்டுப்போவதையும் பொருட்படுத்துவ