பக்கம்:வீடும் விளக்கும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விடும் விளக்கும் மகளைப் பிரிந்திருப்பது மட்டுமா துன்பம்? மகனைப் பிரிந்திருப்பதென்றாலும் இயலாத காரியங் தான். மகனுக்கு மணமாயிருக்கும். (தீபாவளி) மருவுக் காக மாமியார் வீடு சென்றிருப்பான். இங்குத் தாய்க்கு வீடே விளக்கமாய்த் தோன்றாது. நல்ல சமையல் செய்யவும் மனம் ஓடாது. இங்ங்ணம் சிறிது நேரம் பிரிங் திருப்பதே இயலாததென்றால், அப்பிள்ளைகள் இறந்து விட்டாலோ என்ன பாடுபடுவார்கள் என்பதைப் பற்றி இங்கு விரித்துக்கூறவும் வேண்டுமோ? பாயும் படுக் கையுமாகக் கிடப்பார்கள். அதே ஏக்கமாய் இறந்து போகும் பெற்றோர்களும் உண்டு. இவையெல்லாம் உலகில் கண்கூடு. 'புத்திர சோகம் கிரந்தரம்' என்று புகலப்படுவதும் பொய்யாகுமா? விட்டுக்கொடுத்தல் பெண்மணிகள் தம் பிள்ளைகட்காகக் கருவுற்றதி லிருந்து இறுதிவரையிலும் தம் வாழ்க்கையினையே விட்டு (தியாகம்) கொடுக்கின்றார்கள். வாழ்க்கையை மட்டுமா? உயிரையே வாங்கும் நிலைமையும் சில தாய்மார்கட்கு நேருகின்றது. ஒரு பெண் நீண்ட நாட்களாகப் பிள்ளையின்றி இருந்திருப்பாள். பல அறப்பணிகளை (தானதருமம்) செய்து கருவுற்றிருப் பாள். பத்துத் திங்களும் கிரம்பப்பெறும். பிள்ளையும் பிறக்கும். உடனே அவள் இறந்து விடுவாள். அவள் அறப்பணி பல புரிந்ததின் நோக்கம் என்ன? வாழ்க்கை யின் குறிக்கோள்தான் என்ன? தன் குழந்தையால் உயிரையே யல்லவா விட்டாள்? இந்நிலைமையைக்