பக்கம்:வீடும் விளக்கும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 89 னிட்டு வெளியில் சென்றாலும் குழந்தையை விட்டு வந்து விட்டேன் என விரைவில் வீட்டிற்கு ஓடி வந்து விடுகின்றார்கள். ஒரு பெண் சிறுவயதில் தன் தாயை விட்டுப்பிரிய மனமில்லாமல் இருக்கின்றாள். மணமான பின்னும் முதலில் கணவன் வீட்டிற்குச் செல்ல மனம் துணிவதில்லை. பின்பு பிள்ளைகள் பல பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றாள். அச்சமயம் தாய் கடுமையான நோயுற்றிருப்பதாகத் தாய் வீட்டிலிருந்து செய்தி கிடைத்தது. ஒடோடியும் வருகின்றாள். நோயுற்ற தாயைப் பார்க்கின்றான். இரண்டொரு நாளே தங்கியிருக்கின்றாள். பின்பு பிள்ளைகளின் நினைவு வருத்துகின்றது. உடனே தாய் தடுக்கவும் நிற்காமல் கணவன் வீட்டிற்கு ஓடிவிடுகின்றாள். சில பெண்கள் மகளைக் கட்டிக்கொடுத்து விட்டுப் பிரிங் திருக்கப் பெரிதும் வருந்துவார்கள். மகள் கணவனுடன் செல்லும் போது அழுது விடுவதும் உண்டு. தம் வீட்டில் பலர் சூழ இருந்தும், மகள் இல்லாததால் அவ்வீடு அவர் கண்கட்கு வெற்றிடமாகவே புலப்படும். இதனை, 'ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்ப' என்று தொடங்கும் அகப்பாட்டானும் பிறவற்றானும் அறியலாம். ஒரு தாய் காக்கையை நோக்கி, ஏ. காக் கையே! என்மகள் வரும் வண்ணம் கரை வாயேயானால் நினக்குச் சோறிடுவேன்' என்று வேண்டிக்கொண்ட தாகவும் பழைய இலக்கியங்களில் காணக்கிடக்கின்றது