பக்கம்:வீடும் விளக்கும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விடும் விளக்கும் இவற்றுள் மிகவும் போற்றற்குரியது தலையன்பே. தலையன்பு நிறைந்த தாய்மார்கள் பிள்ளைகட்கு வயிறுநிறைய உணவு கொடுப்பார்கள். விரும்பிய உணவையும் செய்து தருவார்கள். குழந்தைகள் சரிவர உண்ணாமல் குறும்பு செய்வது முண்டு. அப்போது நிலா, நாய், பூனை முதலியவற்றைக் காட்டி உண்ணச் செய்வார்கள். சில தாய்மார்கள் முடத்தனமான அன்பினால் வற்புறுத்தி அளவு மீறிச் சோறுட்டி உடம்பைக் கெடுத்தும் விடுகின்றார்கள். சிலர் பெரியவர்கட்குப் பரிமாறும் போதும் இப்பழக்கத்தைக் கையாளுவதுண்டு. இது சிறிதும் கூடாது. மேலும் குற்றம் செய்த பிள்ளைகளைச் சில தந்தைமார்கள் அடித்துத் துரத்தி விடுவதுமுண்டு. அந்நிலையில் தாய்மார்கள் தந்தைக்குத் தெரியாமல் பிள்ளையை வரச் செய்து உணவளிப்பார்கள். அல்லது பிள்ளையிருக்கும் இடத்தைத் தாமே தேடி யடைந்தும் உணவு கொடுப்பதுண்டு. இங்ங்ணம் தந்தை மார்களின் மிரட்டலிலிருந்து அடிக்கடிக் காப்பாற்றி விடுகின்றார்கள். சில குடும்பங்களில், பிள்ளைகள் தாயால் சொல்லச் செய்தே (சிபார்சு) தந்தையிடம் பல நன்மைகளைப் பெறுவதை இன்றும் உலக வழக்கில் காண்கின்றோம். இத்தகைய தாயின் தலையன்பை என்னென்று புகழ்வது? பிரிவாற்றாமை பெண்கட் குப் பிள்ளைகளைப் பிரிந்திருக்கச் சிறிதும் மனம் வருவதில்லை. ஒரு வேலையை முன்