பக்கம்:வீடும் விளக்கும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 87 ஈயொன்று மொய்த்தாலும் அது அவர் கண்களை உறுத்தும். அப்படியாயின் வேறு துன்பங்கட்கும் இடம் கொடுப்பார்களோ? பிள்ளைகள் எவ்வளவு குற்றம் செய்தாலும் பொருட்படுத்தாது விட்டு விடுகின்றனர். அவர்களை அடிக்க மனம் வருவதில்லை. அங்ங்ணம் அடிக்கக் கையோங்கினாலும் அதற்குள் மனமிளகி ஓங்கிய கையை நிறுத்தி விடுகின்றார்கள். சில முரட்டு மூடப்பிள்ளைகள் தம் தாய்மார்களை, அடித்தும் வைதும் அல்லல்படுத்து வதும் உண்டு. அவற்றையும் பொறுத்து மேலும் பேரன்பு கொள்கின்றார்கள். பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' அல்லவா? தாய்த்தலை யன் பு தாயன்பை மூன்றாகப் பிரிப்பதுண்டு. அவை தலையன்பு, இடையன்பு, கடையன்பு என்பனவாம். சில தாய்மார்கள், குழந்தை அழுவதற்கு முன்பே இனி குழந்தைக்குப் பசிவந்துவிடும் எனத் தாமே கினைந்தெடுத்துப் பாலூட்டுவார்கள். பால்கினைங் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ' என மணிவாசகனார் திருவாசகத்தில் குறிப்பிட்டிருப்பது இதனையே. தலையன்பு என்ற பெயரும் இதற்கே உரியதாகும். சிலர் குழந்தை அழத்தொடங்கிய உடனேயே எடுத்துப் பால் கொடுப்பார்கள், இதற்கு இடையன்பு என்று பெயர். சிலர் குழந்தை அழஅழ வேலைகளைச் செய்து முடித்துப் பின்பே வந்து பால் தருவார்கள். இதற்குக் கடையன்பு என்று பெயர்.