பக்கம்:வீடும் விளக்கும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வீடும் விளக்கும் 'இம்மை உலகத் திசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுவின்று எய்துப செறுநரும் விரும்பும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம் வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி,” என்று தொடங்கும் (66) அகப்பாட்டினுள் நயம்பட கவிலப்பெற்றுள்ளது. வளர்க்கும் வன்மை: மற்றும், பிள்ளைகளால் பேரின்பப் பேறடையும் பெண்மக்களே வளர்க்கும் வன்மையினையும் பெற்றிருக் கின்றார்கள். அவ்வன்மை ஆண்கட்கு அவ்வளவு போதாது. பெண்டிர் உதவி ஒரு சிறிதும் இன்றி ஆண்களே வளர்த்ததாகப் பெரும்பாலும் நாம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். பெண்ணிடம் அகப் பட்ட பணமும், ஆணிடம் அகப்பட்ட பிள்ளையும் உருப்படா என்னும் பழமொழியுந்தான் உண்டே. பெண்ணிடம் அகப்பட்ட பணம், காவல் திறமை போதாததால் கள்வராலோ பிறராலோ கவரப்படும். ஆணிடம் அகப்பட்ட பிள்ளை, வளர்ப்புத்திறமை போதாததால் விரைவில் நோயுற்றுக்கெடும். ஆனால், எங்கோ ஓரிடத்தில் இதற்கு மாறாகவும் நடக்கலாம். அது கிடக்க. பெற்றமனம் பித்து பெண்கள் தம் குழந்தைகளை மிகவும் பரிந்து வளர்க்கின்றனர். சுருங்கக்கூறின் குழந்தைமேல்