பக்கம்:வீடும் விளக்கும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 85 இசைக்கப்படும் யாழொலியும் முழவொலியும் வா வா என்றழைப்பது போல் நம் வீடு வரையும் கேட்டது. அவ்வொலியைக் கேட்டும் கணவர் அவ்வீட்டிற்குப் புறப்பட்டாரிலர். என்னையும் குழந்தையினையும் மாறி மாறி நோக்கினார். மணமாவதற்கு முன் தோழி மார்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோதே என்மேல் காதல் கொண்ட காட்சிகள் யாவும் அவர் கருத்தை ஈர்க்கலாயின. ஆகவே அவர் வெளிப் புறப்பாட்டை கிறுத்திக்கொண்டார். எங்களுடனேயே இருந்து இன்புற்றார். எதிர்பாராத அளவில் நிகழ்ந்த நிகழ்ச்சியல்லவா இது? ஏ தோழியே! என் மகனால் குழந்தைப் பருவத்தி லேயே இவ்வளவு பெரிய நன்மை கிடைத்ததை நோக்கின், இன்னும் வயதாக வயதாக மிகப் பெரும் நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதியல்லவா? ஆகவே, பகைவரும் விரும்புமளவில் அழகும் குணமும் வாய்ந்த நற்பிள்ளைகளைப் பெற்றவர்கள் இவ்வுலகில் இன்பமும் புகழும் எய்தி மறுஉலகிலும் நற்பேறு பெறு வார்கள் என்னும் கருத்தில், பல பெரியார்களும் கூறி யுள்ள பழமொழி உண்மையே என்பது விளங்குகின்ற தல்லவா?யான் என் வாழ்க்கையில் கண்கூடாக நுகர்ந்து கண்ட முடிபாகும் இது, பிள்ளைப் பேற்றின் பெருமையே என்று கூறிக் களிப்பெய்தினாள். 3 : : | C. பெரு ട് அம்மடந்தையின் மட்டற்ற மகிழ்ச்சிதானென்னே!