பக்கம்:வீடும் விளக்கும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வீடும் விளக்கும் நான் அறிந்து கொண்டேன். உடனே என் மகனை நோக்கி, குழந்தாய்! உன் தந்தை தேரேறி எங்கேயோ செல்கின்றார். நீ வெளியே சென்று அழுது அவரை அழைத்துவா' என்று தூண்டிவிட்டேன். தேரின்மேலும் குதிரையின் கழுத்திலும் கட்டியிருந்த மணிகளின் ஒலியும் குழந்தையின் காதுக்கெட்டியது. குழந்தை தந்தையைக் காணும் விருப்பத்துடன் வாயிற்படியைக் கடந்து தளர்ந்து தளர்ந்து தெருவில் ஓடினான். அவர் குழந்தையைக் கண்டார். மேற்செல்ல முடியவில்லை. பாகனை நோக்கித் தேரை நிறுத்து எனக் கட்டளை யிட்டார். கீழே வந்தார். மகனைத் தூக்கினார். அவனது பவளம் போன்ற வாய் தன் மார்பில் அழுந்தும்படியாக அணைத்துக்கொண்டார். பின் கீழே விட்டார். குழந்தாய்! வீட்டிற்குச் செல்வாயாக எனக் கூறி உள்ளே அனுப்பினார். இவ்வளவில் ஏமாறு பவனா குழந்தை மேலும் அழத் தொடங்கினான், என்ன செய்வார் தந்தை மறுபடியும் மகனைத் தூக்கிக்கொண்டார். 'என் செல்வமே' என்று கொஞ்சிக் கொண்டே உள்ளே நுழைந்தார். இதற்குக் காரணமாகிய யான் ஒன்றும் உணரா தாள் போன்று நடிக்கலானேன். குழந்தையை நோக்கி. 'ஏடா! அப்பா எங்கேயோ புறப்பட்டார்களே. நீ ஏன் அழுது தடை செய்தாய்? எனக் கூறி ஒரு கோலை எடுத்து அடிப்பவள் போல் அவனைக் குறுகினேன். உடனே தந்தையார் தடுத்து என் கைக்கோலை வாங்கிக்கொண்டார். இங்கிலையில், அயலாள் வீட்டில்