பக்கம்:வீடும் விளக்கும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 83 அன்போடு நடாத்தத் தொடங்குகின்றான். இது புனைந்துரை என்று எவரும் கூற முடியாது. கண் கூடாகக் காணப்படும் நிகழ்ச்சியே. சில நேரங்களில் கணவனும் மனைவியும் தமக்குள் போரிட்டுக்கொள் வார்கள். அதனால் ஒருவர்க்கொருவர் கலந்து பேசிக் கொள்ளாமலும் இருப்பதுண்டு. இங்கிலைக்குத்தான் ஊடல் (சிறுபிணக்கு) என்று பெயர். அங்நேரத்தில் குழந்தை தன் இனிய பேச்சாலும் செயலாலும் அவர் களை மகிழ வைத்து ஊடலைத் தீர்த்துவிடும். பின்பு இருவரும் பிணக்கு நீங்கப் பெறுவார்கள். அம்மகிழ்ச்சி யின் பயனாகக் கலந்து உறவாடுவார்கள். இங்ங்ணம் பலவிதத்திலும் பெண்கள் தம் குழந்தைகளால் நலம் பெற்று விளக்கம் அடைகின்றார்கள். குழந்தையால் நலம் பெற்ற பெண்ணொருத்தி, தான் பெற்ற கலத்தைத் தன் தோழியிடம் கூறி மகிழ்ந்ததாக அகநானு று என்னும் பழந்தமிழ்ச் சங்கநூலில் ஓர் செய்யுள் காணப்படுகின்றது. அந்நிகழ்ச்சியின் விளக்கம் வருமாறு:பல்லோர் கூறிய பழமொழி: 'என் அன்புடைய தோழியே நேற்று நம் வீட்டில் நிகழ்ச்சியொன்று நிகழ்ந்தது; சொல்கிறேன் கேட்பா யாக. என் கணவர் அடுத்த தெருவில் உள்ள அயலாள் வீட்டிற்கு வழக்கம்போல் புறப்பட்டார். புதிதான பூ மாலையாலும் ஆடையணிகலன்களாலும் அழகு செய்து கொண்டார். தன் அழகிய தேரின் மேல் (தேர்-அக் காலத்தில் செல்வர் செல்லும் வண்டியாகும்) அமர்ந் தார். பாகனும் தேரைச் செலுத்தத் தொடங்கினான்.