பக்கம்:வீடும் விளக்கும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விடும் விளக்கும் மருகியைச் சற்று ஒழுங்காக நடத்தத் தொடங்கி விடுவாள். நல்ல உணவு கொடுப்பாள். வேலையும் மிகுதியாக வாங்குவதில்லை. வீட்டை விட்டு வெளி யேறச் சொல்வதும் இல்லை. அந்தப் பெண் தன்னை யறியாது ஒரு குற்றம் செய்துவிட்டாலும், தன் குழந்தையை ஒரு காரணமாகக் காட்டிப் பிழைத்துக் கொள்ள முடியும். குழந்தைப் பருவத்திலேயே இவ்வளவு பெரிய நன்மைகளைச் செய்யும் பிள்ளை களைப் பெண்களின் விளக்காகக் கூறுவது பொருத்தமே என்பது இப்போது நன்கு விளங்கும். ஆனால் சில பெண்கள் குழந்தையைக் காரண மாகக் காட்டிக் காட்டிக் குடும்பத்தில் அடாதன செய்கின்றனர். 'சருக்கியது சாக்கு' என்பது இவரளவில் உண்மைப்படுகின்றது. சிறிதும் அது கூடாது. அங்ங்ணம் செய்வது, வெளிச்சத்திற்காக ஏற்றிய விளக்கை வீட்டைக் கொளுத்துவதற்குப் பயன்படுத்தும் மடமையோ டொக்கும். ஆதலின், குழந்தையால் கிடைக்கும் வாய்ப்பை நல்ல வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் முறைமை யாகும். அறிவுடைமையும் ஆகும். ஊடல் நீக்கம்: மற்றும், மாமியார் கொடுமையினின்றும் தப்புவது போலவே கணவன் மிரட்டலினின்று தப்புவதற்கும் குழந்தை ஒரு காரணமாக இருப்பதுண்டு. கணவன் எவ்வளவு கொடியவனாய் இருப்பினும், குழந்தையின் நன்மைக்காகவாவது சில நேரத்திலாயினும் மனைவியை