பக்கம்:வீடும் விளக்கும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 8|| பெற்றவர் பின்பு எப்பிறவியிலும் துன்பமின்றி இன்பம் எய்துவர் என்றெல்லாம் பலபட விரித்துக் கூறி யுள்ளார். இதனால்தான் பிள்ளையில்லாப் பெருஞ் செல்வர்கள் இன்பம் பெறாத ஏழைகளாக எள்ளப் படுகின்றார்கள். பிள்ளையுள்ள ஏழைகள் செழிப்புமிக்க செல்வராகச் சிறப்பிக்கப்பெறுகின்றார்கள். இத்தகைய விளக்கம் தரும் பிள்ளைகளைப் பெறுதற்கு எப்பெண் னால்தான் ஆவல் கொள்ளாதிருக்க முடியும்? எத் துன்பத்தையும் பொறுக்க உடன்பட்டுப் பிள்ளையிருந் தால் போதும் என எண்ணுவதும் இயற்கைதானே? இளமை உதவி: சில குடும்பங்களில், குழந்தைகள் தம் இளமைப் பருவத்திலேயே தாய்மார்கட் குச் சில உதவிகளை இயற்கையாகவே செய்து கொடுக்கின்றார்கள். சில பெண்கள் மாமியார் கொடுமையிலிருந்து தப்பிப் பிழைப் பதற்குக் குழந்தையை ஒரு பற்றுக் கோடாகக் கொள் கின்றனர். சில வீடுகளில் கொடிய மாமியானவள் மருமகளை ஒழுங்காய் நடத்துவதில்லை. வயிற்றுக்கும் கிறைய உணவு கொடுப்பதில்லை. பழைய உணவு முதலியவற்றையே கொடுப்பாள். எப்போதும் வைது கொண்டேயிருப்பாள். எடுத்ததற்கெல்லாம் வீட்டை விட்டு வெளியே போ என்றும் விரட்டுவாள். உள்ள மட்டும் வேலையை வாங்கிக்கொள்வாள். ஆனால் நல்ல பேர் இருக்காது. இப்படியிருக்கும்போது அப் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்துவிடும். உடனே மாமியானவள், பேரப் பிள்ளையின் நன்மைக்காயினும்