பக்கம்:வீடும் விளக்கும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விடும் விளக்கும் கிடைக்கப் பெறாதோர் வாணாள் வீணாளாம். இவற்றை, 'படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெரும் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்தும் சிறுகை நீட்டியும் இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை வில்லைத் தாம்வாழு காளே” என்னும் புறநானூற்றுப் (188) பொற்பாடல் புலனாக்குகின்றது. பாடியவர், பாண்டியன் அறி வுடை நம்பி என்னும் அரசர் பெருந்தகை. இக்கருத்துக் களையமைத்து, 'அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்', 'குழலினிதி யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்' என நம் வள்ளுவரும் நயம்பட நவின்றுள்ளார். இங்கு, தம் குழந்தைகள் கையை விட்டுத் துழாவியது கூழாயினும் அமிழ்தத்தைக் காட்டிலும் இனியதாகும்; தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேட்டு மகிழாதாரே குழலையும் யாழையும் இனியன எனப் புகழ்வர் என வள்ளுவர் கூறியிருப்பது குறிப் பிடத்தக்கதாகும். மேலுமவர், மனிதர்கள் அடைய வேண்டிய பேறுகட்குள் நன்மக்கட் பேறே சிறந்த தாகும்; அதைத் தவிர நற்பேறு வேறொன்றுளதாகத் தோன்றவில்லை; நற்குணம் நிறைந்த பிள்ளையைப்