பக்கம்:வீடும் விளக்கும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 79 பிறவற்றையும் செய்துமகிழ்வதையே தம் வாழ்க்கையின் பெரும் பயனாகக் கொள்கின்றார்கள். தமக்குக் குழந்தையில்லாது போயின், பிறர் குழந்தையைக் கண்டுவிட்டாலும் தொடங்கிவிடுகின்றார்கள் இவ் வேலைகளை. பிள்ளைகள் முதன்மையாகப் பெண் களின் விளக்காகப் பேசப்படுவதற்கும் இன்னபிற செயல்கள் காரணங்களாகும். சுவையுடைய வாழ்க்கை: அன்றியும், எவ்வளவு பெருஞ்செல்வராயினும் பிள்ளையிலாதார் வாழ்க்கையில் ஒருவித ஊக்கமும் இராது. ஒருவித இன்பச் சுவையும் இராது. பல பொருள்களையும் படைத்துப் பலரோடுண்டு மகிழக் கூடிய அளவு பெருஞ் செல்வராய் மட்டும் இருந்தால் போதுமா? அல்லது உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் அமையப்பெற்று முடி தாங்கிய மன்னராய் இருந்தால் தான் போதுமா? தம் பிள்ளைகள் பேசுகின்ற யாழ், புல்லாங்குழல்களைக் காட்டிலும் இனிமையான மழலைச் சொற்களைக் கேட்டு மகிழவேண்டாவா? குறுகுறுவென நடக்கும் நடையைக் கண்டு பெருமிதம் பெற வேண்டாவா? தம்மேல் படுத்துப் புரண்டு கையை நீட்டிக் காலால் உதைக்கும் உதையை ஏற்று இன்புற வேண்டாவா? உண்ணும் உணவில் கையை யிட்டுத் துழாவி வாயில் வைத்துக்கொண்டு தம் மேலும் பூசி நகைக்கின்ற குழந்தையின் செயலைக் கண்டு களிகூர வேண்டாவா? சுவையுடைய வாழ்க் கையும் இதுவேயன்றோ? இத்தகைய இன்பங்