பக்கம்:வீடும் விளக்கும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7g - வீடும் விளக்கும் பெண்கள் பிள்ளையாவல் கொள்வதிலேயே பெரிதும் வியப்புள்ளது. எனவே, பிள்ளைகள் பெற்றோர் இருவர்க்கும் விளக்காகத் திகழினும், மேற் கூறப் பட்டுள்ள இயற்கைச் சிறப்புரிமைகளை நோக்கிப் பெண்களின் விளக்காகவே கூறிவிடுவதில் குற்ற மொன்று மில்லையல்லவா? குழந்தை விளையாட்டு: இதற்கேற்றபடியே பெண் குழந்தைகளின் விளையாட்டும் அமைந்துள்ளது. ஆண் பிள்ளைகள் இளம் வயதில் வேறு பல ஆட்டங்களை ஆடுகின்றனர். பெண் பிள்ளைகளோ மணல்வீடு கட்டி மணற் சோறாக்குகின்றனர். அதனோடு குழந்தை விளையாட்டும் ஆடுகின்றனர். ஒரு பொம்மைக்குக் குழந்தை எனப் பெயரிட்டுக் காலில் போட்டுத் தலை முழுக் காட்டுகின்றனர். மருந்துட்டு கின்றனர். பாலும் போடுகின்றனர். மணற்சோறுட்டு வதும் உண்டு. முத்தமிட்டு அப்பொம்மையோடு கொஞ்சிக் குலாவுவதையும் கிறுத்துகின்றார்களா? இவ்வளவு தாமா? இன்னும் பல செய்கின்றனர். பொம்மை வடிவாக இல்லாவிடினும் ஒரு மாக்கட்டையை வைத்துக்கொண்டாயினும் பொய் யாட்டத்தைத் தொடங்கி விடுகின்றனர். சிறுமியர் கட்கு இதில் ஒரு பேரின்பம். சிறுமியர்க்கு மட்டுமா? பெரிய பெண்கட்கும் இம்முறையில் பெரிய பித்துண்டு. தம் குழந்தைகளோடு அடிக்கடிக் கொஞ்சுவதையும், குழல் பின்னுவதையும், சோறுட்டுவதையும் இன்ன