பக்கம்:வீடும் விளக்கும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விடும் விளக்கும் லாம். தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு' என்னும் தொடர் எழுந்ததும் இவர் களை நோக்கியே. இன்னோர் மிகக்குறைவாகலின் இன்னோர் செயலை விட்டுத்தள்ளுவோம். எனவே, பெண்மணிகள் பெரிதும் பாடுபட்டுப் பிள்ளைகளைப் பெற்றுத் தலையன்பால் தம் வாழ்க்கையினையும் விட்டுக்கொடுத்து வன்மையுடன் வளர்ப்பதையே தமக்குப் பெரியதொரு விளக்கமாகக் கொள்கின்றார்கள் என்பது வெளிப்படை. விருப்பும் வெறுப்பும்: இங்குக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டிய மற்றொரு நிகழ்ச்சியும் உண்டு. உலகில் மக்கள் பலர் ஆண் குழந்தைகளையே பெரிதும் அவாவி விரும்பு கின்றார்கள். பெண் குழந்தை பிறந்தால் பெரிதும் வெறுக்கின்றார்கள். சோர்ந்தும் விடுகின்றார்கள். அவர் எண்ணப்படியே ஆண்பிள்ளைகளே பிறந்தால் அப்பிள்ளைகட்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் பிள்ளைகள் வேண்டாவா? அப்பெண் பிள்ளைகளை வேறு எவரேனும் பெற்றுத்தானே தீரவேண்டும்? அவர்கட்கு மட்டும் அவ்வெறுப்புத் தோன்றாதா? தாமட்டும் அல்லலின்றி யிருந்தால் போதுமா? அ.தென்ன மனப்பான்மை? 'புல்லென்றால் வாயைத் திறப்பதா? கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதா? பெண்பிள்ளைகளையும் கடிவாளமாகக் கருதாது புல்லாகவே கருத வேண்டுவது கட்டாயம் அல்லவா? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டவா? ஒரு சிலர்க்கு ஆண் பிள்ளைகள்