பக்கம்:வீடும் விளக்கும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 விடும் விளக்கும் கம் நாட்டில் இப்போதில்லை. தங்கள் மகன் பட்டாளத் திற்குச் சென்றானாயின், ஒரே ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதற்காக அஞ்சக்கூடாது. போய்வருவானாக!' என்றிருக்க வேண்டும். தள்ள முடியாக கட்டாயம் ஏற்படின் தாமும் அயல்நாட்டுப் பெண்களைப்போல் போர்க்களத்தில் முன்னணியில் கிற்கவேண்டும். இத்தகைய தாய்மார்களின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே வீரமணிகளாகத் திகழ்வார்கள் "புலிக்குப் பிறந்ததும் பூனையாகுமா?" வீரப்பெண்; இங்கு நம் நாட்டில் வழங்கும் சிறுகதை யொன்று கினை வைத் தூண்டி கிற்கின்றது. ஒரு வீரப்பெண் அவள். கணவன் போருக்குச் சென்றான். வெற்றியும் பெற்றான், வீட்டிற்கும் திரும்பினான். மனைவியோடு இன்புற்றிருக்கலானான். மறுபடியும் ஊரில் போர் முழக்கம் எழுந்தது. அம்முழக்கம் வீரப்பெண்ணின் காதில் கேட்டது. இ.தென்ன ஒலி? என்று கணவனைக் கேட்டாள் அவள். போர் முழக்கம் என்றான் அவன். அப்படியாயின் விேர் இப்போது போர்க்குச் செல்ல வேண்டாவா? என்று வினாவினாள். அதற்கவன், யான் இப்பொழுதுதானே போர்க் களத்திலிருந்து வந்தேன். இன்னொருநாள் ஒய்வெடுத்துக் கொண்டு உன்னுடன் இன்பப்பொழுது போக்க விரும்புகின்றேன் என்று பதிலீந்தான். உடனே அவள் அறிவித்த தென்ன? அப்படியாயின் விேர் ஓய்வெடுத்துக் கொண்டு இங்கேயே இருக்கலாம்; ஆனால் என்