பக்கம்:வீடும் விளக்கும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 95 வுடனேயே தாமாகவே பழகிக்கொள்ளும் பிள்ளைகட்கு அத்தீக் குணங்களைக் கற்றுக்கொடுக்கும் தாய்மார் களும் உளர். பிறரை வையச் சொல்வர். பிறர் வீட்டுப் பொருள்களைத் திருடி எடுத்துக்கொண்டு வரவும் கற்றுக்கொடுப்பர். இவ்வளவுதாமா? இன்னும் பல உள. இப்பழக்கம் அறவே கூடாது. தாம் ஒர் ஆசிரியர் (குரு) போல் இருந்து நல்ல கருத்துக்களைப் புகட்ட வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களில் திருப்ப வேண்டும். பிற்கால வாழ்க்கைக்குப் பெரிதும் பயன் படக்கூடிய வேலைகளைத் திறம்படக் கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகட் கெதிரில் கெட்டதைப் பேசு வதும் கூடாது, செய்வதும் கூடாது. கெட்டதைப் பேசினாலும் செய்தாலும் நம்மை அம்மா அடிப்பாள் என்ற அச்சம் பிள்ளைகட்கு உண்டாகும்படியாகத் தாய்மார்கள் நடந்துகொள்ளவேண்டும். வீரம் ஊட்டல்: சில தாய்மார்கள் பிள்ளைகளை அடக்குவதற்குத் தம் மிரட்டலைப் பயன்படுத்துவதில்லை. பூனை பூச்சாண்டிகளைக் காட்டியே அச்சுறுத்துகின்றனர். அது கூடாது. சிறுவயதில் ஏற்பட்ட இவ்வச்சம் பெரியவர்களான பின்னும் வாழ்க்கையைப் பெரிதும் தாக்குகின்றது. ஆதலின் குழந்தைகளைக் கோழை களாக்கக்கூடாது. வீரமூட்டி வளர்க்கவேண்டும். வீரமும் தீயவழியில் செலுத்துவதாய் இருத்தலாகாது. பிள்ளைகட்கு வீரம் வரவேண்டுமாயின, முதலில் தாய் மார்கட்கும் வீரம் இருக்கவேண்டும். இந்த அமைப்பே