பக்கம்:வீடும் வெளியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 五6零 ஆயினும், ஆனந்தம் பூரண நிலை எய்தவிடாமல் தடுக்கும் விதத்திலே நாட்டின் சில பகுதிகளில் வேண் டத்தகாத விளைவுகள் தலையெடுத்திருந்தன. மதவெறி யும் இனவெறியும் கோரக் கூத்துப் பயின்றன. வெறியர் கள்-குண்டர்களின் மிருகத்தனத்துக்கும் கயமைக் குணங்களுக்கும் அப்பாவி மக்கள் பலியாயினர். ரத்த வெள்ளம பாரதப் புனித நாட்டைக் களங்கப்படுத்திக் கொண்டிருந்தது. மகாத்மா காந்தி ஆத்ம வேதனை அனுபவித்தார். கொலே வெறி தாண்டவமாடிய இடங்களுக்கு நேரில் சென்று கருணை காட்டுவதில் ஈடுபட்டார். ஆட்சி, உரிமையை மக்களிடம் தர முன் வந்த அந்நியர்கள் விதைத்துவிட்டுச் சென்ற அரசியல் அக்கிரமம் இது என்று பலரும் அபிப்பிராயம் தெரிவித் தார்கள். அரசியலில் மதத்தைப் புகுத்தி, மக்களின் உணர்ச்சியைத் துாண்டி விட்டு, லாபம் பெற முயன்ற தன் விளைவு என்ருர்கள் அநேகர். அரசியலில் மகாத்மா காந்தி மதத்தைக் கலந்தபோதி லும், மக்களின் உள்ளத்தைப் பண்படுத்துவதற்காக, அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக, நாட்டின் பெருமையை ஒளியுறுத்துவதற்காக, லட்சிய தாகத்தோடு வழி வகுத்து வந்தார். அறநெறிகளிலும் ஆன்மீக வழிகளிலும் பற்றுதலும், நம்பிக்கையும் கொண்ட உத்தமர் அவர். ஆனல், தேசிய இயக்கத்தோடு போட்டியிடக் கிளம்பி, நாட்டில் பங்கு கோருவதற்காக, மதத்தைப் பலம் பொந்திய துருப்பாக உபயோகிக்கத் துணிந்த காயிதே ஆலம் ஜின்ன ஆன்மீக உயர்வையோ, அற நெறிகளையோ லட்சியமாகக் கொள்ளவில்லே. மக்களின் மதப் பற்றையும், ஜாதி வெறியையும்,போற்றி:வளர்ப்பு தற்கே வழிகள் செய்தார் அவர். அதன் அறுவடை பயங்கரமாய், கோரமாய், இந்தியாவின் பல பகுதிகளி லும் நிகழ்ந்து கொண்டிருந்தது.