பக்கம்:வீடும் வெளியும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வாழ்வுப் பாதை காந்திமதிநாதன் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வருங்காலம் நம்முடையது. நாம் வாழவே பிறந்தோம்" என்று அவன் உற்சாகத்துடனும், உறுதியோடும் அடிக் கடி பேசியவன்தான். என்ருலும், அவனுடைய வருங் காலம் தெளிவற்றதாய், குழப்பம் படிந்ததாய், அச்சம் தரக் கூடியதாய், இருண்டே காணப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்று விட்டது; மக்களின் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ருயிற்று. வளமும் நல மும் காண்பதற்கான திட்டங்கள் பற்றிப் பிரசாரங். களும் நடைபெறலாயின. இனி அவரவர் சொந்தப் பிரச்னைகள் குறித்துச் சிந்தனை செய்ய வேண்டியதுதான் என்று காந்தி கருதினன். தொண்டர் நாதனும் அவனிடம் அந்த ரீதியில் ஒரு நாள் பேச்சு வளர்த்தார். என்ன காந்தி, ஒருவாறு லட்சிய சித்தி பெற்ருயிற்று. இனியும் நீ இப்படி இருந்து விட முடியுமா என்ன? கல்யாணம், குடும்பம் என்று: ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டாமா?’ என்று: அவர் விசாரித்தார். அவன் சிரித்தான். பொருளாதார சுதந்தரம் வேண்டாமா?' என்ருன். காந்தி நாட்டின் பொருளாதாரத்தையும், பொது வுடைமையையும் கருத்தில் கொண்டே பேசுவதாக நாதன் எண்ணிவிட்டார். அது இப்போது எங்கே. ஏற்படப் போகிறது? நாட்டுக்கு தற்சமயம் கிடைத் துள்ள சுதந்தரத்தை ஆதாரமாகக் கொண்டு, சுயிட் சத்திற்கான வழி வகைகள் காண்பதில் தான் தலைவர்கள் அக்கறை காட்டி வருகிருர்களே' என்று சொன்னர். "நான் பெரிய பிரச்னைகளைப் பற்றிக் குறிப்பிட வில்லை. எனது சொந்தப் பொருளாதார நிலையையே. சொன்னேன். எனக்குப் பொளாதாரப் பலம் இல்லை. என்னுடைய சொந்தத் தேவைகளுக்குப் போதுமான