பக்கம்:வீடும் வெளியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 罩型 "புவி போற்றும் கவிராச சிங்கம் அவனியோர் புகழும் அன்புத் தங்கம்’ என்று பாடிக்கொண்டு, வீட்டுக் கதவை இழுத்தும் பூட்டின்ை. சாவியை வழக்கமாக வைக்கும் ஒரு மறை விடத்தில் வைத்துவிட்டு வெளியே கிளம்பிஞன். "ஐயாப்பிள்ளை உலகம் கற்றக் கிளம்பியாச்சி!" என்று அவன் மனம் பேசியது. அவனுக்கு உலகம் என்பது திருநகரின் பெரு வீதிகள்தான். 'சொக்குக் கவிராயர் வந்து விட்டார் சொக்குப் புலவர் வாருரு” என்று மகிழ்ச்சியோடு வரவேற்க அன்பர்கள் எங்கும் இருந்தார்கள். கவி காளமேகத்தின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு, இம்மென்ருல் பாட்டு; ஏன் என்ருல் வேட்டு!” என்ற ரீதியில் சொல் அ டு க் கி ய வ | று திரிந்தி சொக்கையா ஆதியில் பீடி விளம்பரங்களுக்குப் பாட்டு எழுதும் பணியில் முனைந்துதான் கவிராயராகப் பரிண மித்தான். 'ஜாடி மார்க்குப் பீடி தேடி வாங்கு ஒடிசி ஒன்ருய் கின்று கூடி சுவைத்து மகிழலாம் வாடி!' என்ற தன்மையில் அவன் பாடிய பாட்டுக்கள் அவனுக்குப் புகழையும் கவனிப்பையும் பெற்றுத் தந்தன. அவ்வப்போது காப்பிக்கும் டியனுக்கும் வகை செய்து தந்தன. - சொக்குக் கவிராயர் பீடிப் புகழ் பாடும் புலவர் நிலையிலிருந்து வளர்ந்து, காளி அம்மன் கோயில் கொடை, திருவிழாக்கள் சமயத்தில் பால்குடம் கரகம், காவடி வகையரா சுமந்து ஆடுவோர் கூட்டங்களுக்குப் பாட்டுகள் பாடும் பாவலராஞர். அவருடைய கீர்த்திக் கொடி மேலும் உயர்ந்து படபடப்பதற்கு தேசியப் போராட்டமும், மக்களின் எழுச்சியும் துணை புரிந்தன.