பக்கம்:வீடும் வெளியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏露莎 வீடும் வெளியும் களேயும் மனிதத் தன்மையையும் காவு கொடுக்கத் தயங் குவதில்லை என்றும் காந்திமதிநாதன் உணர முடிந்தது, சுந்தரமும், அவரைப் போன்றவர்களும் பளீரெனப் பிரகாசிக்கும் வெண்ணிறக் கதராடைதான் அணிந்தார். கள். ஆனல், புனிதத்தின், உழைப்பின், உண்மையின், ஏழ்மையின், உரிமை உணர்வின், விடுதலை வேட்கையின் சின்னம் என மகாத்மாவினுல் மதிக்கப்பட்ட அந்தத் துணிகூடப் பழைய சிறப்பை இழந்து விட்டது என்றே காந்திக்குத் தோன்றியது. ஒரு பாஷன்' போலவும் அந்தத் துணி அணிவதன் மூலம் தனிக் கெளரவமும் பெருமையும் பெறலாம் என்ற எண்ணத்தினுலும் இந்த வேஷத்தின் உதவியோடு சமூக அந்தஸ்தையும் தனிச் சலுகைகளையும் பெறமுடியும் எனும் நோக்கிலும் அநே கர் அதை விரும்பி உடுக்கிரு.ர்கள் என்றும் அவன் கருதினன். - ஒரு நாள் சுந்தரம் அவனிடம் சொன்னர். நீங்கள் ஒரே சட்டையை ஒரு வாரத்துக்கு உபயோகிக்கிறீர் களே. ஏன், உங்களிடம் அதிகமான சட்டைகள் இல் லையா? அரை டஜன் சட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்து விடுவோம் என்று...” வேண்டாமே. என்னிடம் போதுமான சட்டைகள் இருக்கின்றன தேவைக்கு அதிகமான சட்டைகள் ஏன்? அழுக்கு அதிகம் ஏறிவிட்டால், வேர்வை நாற்றம் படிந்திருந்தால், சட்டையை மாற்ற வேண்டியது தான். சும்மா அடிக்கடி வேறு சட்டை ஏன் போடவேண்டும்?' என்று குறிப்பிட்டான் காந்தி. அவன் மீது அனுதாபப்படுவதுபோல் சுந்தரம் பார்வை வீசினர். "நான் சொல்வதை நீங்கள் தவருக எண்ணிவிடக்கூடாது’ என்று ஆரம்பித்தார் அவனிடம், அவன் கருத்துக்கு மாறுபட்ட அபிப்பிராயத்தை எடுத் துச் சொல்ல முற்படுகிற போதெல்லாம், அவர் இப்படிப் பேசுவது வழக்கமாகி விட்டது. எனவே, தனக்குப் பிடிக்காத உபதேச மொழிகள், நல்லுரை, நண்பரின்