பக்கம்:வீடும் வெளியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27° வீடும் வெளியும் l வார்த்தை வெளிப்படப் போகின்றன என எதிர்பார்த்து. அவனும் தயாராளுன். நம்ம மாவன் னு இருக்கிருரே, அவரு தினந்: தோறும் ஒரு சட்டை மாற்றிக் கொள்கிருர், அழுக்கு ஆகுமோ ஆகாதோ, தூசி படிகிறதோ இல்லையோ, அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு. நாளும் வெவ்வேறு சட்டை. அதுதான் அவர் பாலிசி. அவரைப்போல் எல்லோரும் நடந்து கொள்ள முடியாது. தான். அதுக்கு அவசியமும் இல்லை. நான் ஒரே சட். டையை இரண்டு நாட்கள் போட்டுக் கொள்வேன். மேடை முதலாளி மாதிரிப் பிரமுகர்களும் இவ்விதம் தான் செய்கிரு.ர்கள். இதுகூடத் தேவையில்லை. படாடோபம் என்று நீங்கள் நினைக்கலாம் மூன்று நாட் களுக்கு ஒருமுறை சட்டை மாற்றுங்களேன், அது எடுப் பாக இருக்கும் ஒரே சட்டையை ஏழெட்டு நாள் போடுவது என்கிறது.’ என்று இழுத்தபடியே விட்டு: விட்டார் சுந்தரம் "எனக்குப் பிடிக்கவில்லை’ என்றும் அதைப் பூர்த்தி செய்யலாம். நாகரிகம் அல்ல. பெரிய மனித வட்டா துக்கு உகந்தது அல்ல. கெளரவக் குறைவு’ என்று எதையர்வது போட்டும் நிரப்பலாம். காந்தியின் மனம் இதைச் சுட்டத் தவறவில்லை.

  • தரித்திர நாராயணர்களின் பிரதிநிதியாகவே நான் விளங்குகிறேன். என்ருர் மகாத்மா காந்தி. அவர் பெரிய வேட்டியும் துண்டும்கூட உபயோகிக்க விரும்பியதில்லை நாட்டுப் பணி புரியும் தொண்டர்களிடம் இரண்டு. வேட்டி, இரண்டு சட்டை, இரண்டு துண்டு இருந்தாலே போதும், அவற்றை அவர்களே சோப்புப் போட்டுத் தோய்த்து உலர்த்தி அணிந்து கொள்ளலாம் என்று சொல்லி, அவ்வழக்கத்தைக் கையாண்டும் வந்தார் ஒரு பெரும் தலைவர். எளிய வாழ்க்கை பற்றிச் சிந்தித்தும், தேவைகளைக் குறைத்துக் கொள்வது பற்றிப் பேசியும் வருகிருர்கள் பலர்."

காந்தியின் பேச்சை வளரவிடாமலே சுந்தரம் குறுக் கிட்டார். அவை எல்லாம் லட்சியங்கள். எழுத்துக்