பக்கம்:வீடும் வெளியும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$40 வீடும் வெளியும் தொண்டரின் வேதனைக் குரலைப் பொறுமையோடு கேட்டிருந்த காந்தி மதிநாதன் கேட்டான். மகாத்மா காந்தி உயிரோடு இருந்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டி - 3. - - ? -- گست சாது எனது எண்ணுகிறீர்களா? என்று. "எப்படிச் சொல்ல முடியும்? காலவேகம் மக்களின் வாழ்க்கையிலும் மனுேபாவத்திலும் எவ்வளவோ மாறு தல்களைப் புகுத்தி வருகிறது. நாகரிகமும் விஞ்ஞானமும் புறவாழ்வில் சேர்த்துள்ள புதுமைகளும் வசதிகளும் மனிதரின் அகத்தையும் பாதிக்கத்தானே செய்யும்? அதன் மூலம் மக்களின் ஆத்மீக வாழ்வும்-தர்ம நியாய உண்மை உணர்வுகளும் பிறவும் வெகுவாக பாதிக்கப் படத்தான் செய்யும். மகாத்மாவின் ஆத்மபலம் ஒரள அக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கக் கூடும். அவரால் கட்டுப்படுத்த இயலாத அளவுக்குச் சிதைவும் சறுக்க இக் அதிகரித்துவிடுமானல், அவர் இந்த இயக்கத்தையே கலைத்து விடுகிறேன்; வேறு எப்பெயரிலாவது ஒரு அமைப்பு ஏற்பட வேண்டிய அவசியம் என்ருல் அவ் வாறே செய்து கொள்ளுங்கள் என்று சொன்னலும் சொல்லி விடுவார் சுதந்தரம் என்கிற லட்சியம் சித்தி அடைந்ததுமே தேசிய விடுதலை இயக்கம் கலைக்கப்பட வேண்டியதுதான் என்று மகாத்மா சொன்னர். அது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அதிகாரம், ஆட்சிப் பொறுப்பு, பதவி மோகம் என்றெல்லாம் வந்தவுடன் தேசிய இயக்கம் தனது தன்மையை இழந்து, குணம் கெட்டு, மதிப்புக் குறைந்து போகும் என்று அப்பொ முதே அவர் அந்தராத்மா உணர்ந்து விட்டதோ சான்னவோ!' - நாதன் ஒரு பெருமூச்சுடன் பேச்சை முடித்து விட்டு, மெளனத்தில் ஆழ்ந்தார். 28. திடீர் வருகை இரவு ஒன்பது மணிக்கு மேலிருக்கும் சாந்திமதிநாதன் அவனுடைய அறையில் உட் கார்ந்து படித்துக் கொண்டிருக்கான்.