பக்கம்:வீடும் வெளியும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莺44 வீடும் வெளியும் பனநாயகர்களின் ஆதிக்கத்தில் சி க் கி வி ட் ட து. முதலாளிகள்தான் வெற்றிகரமாகப் பத்திரிகைகள் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரே முதலாளி ஒன்பது பத்திரிகைகள் நடத்துவதும், நாட்டின் வெவ்வேறு இடங்களில் பத்திரிகைகள் நடத்து வதும், லாபகரமான வழி என்று கண்டு, அவ்விதமே செயல் புரிந்து, வருகிற சூழ்நிலையிலே, சிறு பத்திரி கைகள் அவற்றுடன் போட்டியிட்டு வளரமுடியவில்லை. முதலாளிகள் முதலாளிப் பத்திரிகைகளையே ஆதரிப் பார்கள். அதல்ை விளம்பரங்கள் எல்லாம் பெரிய அளவில் நடத்தப்படுகிற பத்திரிகைகளுக்கே கிட்டு கின்றன. விளம்பர பலமும் பணபலமும் பெற்று விடுகிற பத்திரிகைகள் மக்களின் ஆதரவை எளிதில் பெறுவதற்காக ரசனைக் குறைவான தரக்குறைவான விஷயங்களையும், கதைகளையும் சித்திரங்களையும் அதிகம் அதிகமாகத் தருகின்றன. ஒழுக்கம், மொழி, வளர்ச்சி போன்ற உயர்ந்த விஷயங்களைவிட, சுலபத்தில் பணம் சேர்ப்பது எனும் நோக்கமே பத்திரிகைக்காரர்களை ஆட்டுவிக்கிறது. இவர் களோடு போட்டியிட்டு, உயிர்வாழும் பலம் என் போன் றவர்கள் ஆரம்பிக்கக் கூடிய பத்திரிகைக்கு எப்படி வாய்க்கும்? அதனுலேயே நான் பத்திரிகை நடத்தும் எண்ணத்தை விட்டுவிட்டேன்' என்று நடராஜன் சொன் ஞன். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் லெக்ச ரடிப்பது போல் பேசுகிற வழக்கம் அவனிடம் வளர்ந்து விட்டதைக் காந்தி புரிந்து கொண்டான். நண்பனிடம் கேவி பேசாமல் மெளனமாக அவன் பேச்சைக் கேட்டி குந்தான். - "நீ பழைய மாதிரியேதான் இருக்கிருய். அது சரி யல்ல. மாறுதல் தேவை. மாறுதல் வளர்ச்சியின் அறி குறி. உன் வாழ்க்கையில் இப்போது இரண்டு மாற்றங் கள் அவசியம் தேவை. நீ பொதுவுடைமைக் கட்சியில் சேரவேண்டும். அது அரசியல் வளர்ச்சிக்காக. சொந்த வாழ்க்கை நலத்துக்கும், மனிதாபிமான வளர்ச்சிக்கும்