பக்கம்:வீடும் வெளியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 盈韋 சரக்குகள் நெய் மாதிரி இருக்கும். நாவில் போட்டால் அப்படியே தனிச்சுவையாய் கரைந்து உள்ளிறங்கும்) ஒவல்டின்னும், காலிபோர்னியா அத்திப்பழ சர்பத்தும் உண்டு பெரிய ஆள் ஆளுர், ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் வந்திறங்கிய கருநிறத் திராட்சைகளும், அதே போல்வந்த ஆப்பிள்களும் அவர் உடம்பில் அருமையான ரத்தமாக மாறின. இந்தப் பழக்க வழக்கமெல்லாம் திருநகரில் விடுதலைப் போராட்டம் தலையெடுத்த காலத்திலும் ஜாம் ஜாமென்று நடந்து கொண்டு தானிருந்தன. அவர் அருமையான, மிகமிக நைலான, கிளாஸ்கோ மல்தான் அணிவார். மிக உயர்ந்த ரக சீமைச் சுருட்டு தான் புகைப்பார். உயர்ந்த ரக மதுதான் அவர். வீட்டில் .பாட்டில் பாட்டிலாக இருக்கும். ராஜயோக வாழ்க்கை வாழ்ந்த பிறவிப் பெருமாள் அவருடைய அப்பாவின் போக்கை ஆதரிக்கவில்லை. ஊருக்கு ஒரு பெண்ணை வைத்துப் போஷிப்பது பெரிய மனுஷத்தனம்’ என்று படவில்லை அவருக்கு. அது கெளர வமாகவும் தோன்றவில்லை. - ஆகவே, தேர்ந்தெடுத்த அ ழ கி ஒரு த் தி ைய உள்ளூரில், தமது வீட்டுக்கு அருகிலேயே, ஒரு பங்களா வில் குடியேறச் செய்தார், 'பொன் அவிர் மேனிச் கபத்திரை மாது அவள். அவள் பெயரும் சுபத்ராதான், "மலையாளத்து ஆச்சி என்று மற்றவர்கள் குறிப் பிட்டார்கள். ஆயினும், இவளுடைய அழகைப் பார்த்தும் மேடை முதலாளியின் அதிர்ஷ்டத்தை நினைத்தும் பொருமைப்பட்டுப் பெருமூச்சு எறியாதவர்கள் அந்த வட்டாரத்திலேயே அபூர்வம்தான்! பிறவிப் பெருமாளுக்கு நண்பர்கள் பலர் இருந்: தார்கள். எல்லோரும் பெரிய மனிதர்கள்'- அதாவது, வேலே இல்லாமல் வெட்டிப் பொழுது போக்குவதற்கு வாய்ப்பும் வசதியும் பெற்றிருந்தவர்கள். அப்பன் மார் தேடி வைத்திருந்த சொத்தும். அந்தத் துண்டிலேக் காட்டி, பெண்ணைப் பெற்றவர்களிடமிருந்து தண்டிய சொத்தும், பண்டைப் பெருமையைச் சொல்லி சுலபமாக