பக்கம்:வீடும் வெளியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 壽劉 நாடு முழுவதும் காணப்பட்ட புது விழிப்பும், மக்களின் புதிய எழுச்சியும், அவற்றின் விளைவுகளும் *இந்தியன் கிளப்' அங்கத்தினர்களின் உரையாடலுக்கு உரிய விஷயம் ஆவதிலிருந்து தப்பிவிட முடியுமா என்ன? பல பிரமுகர்களும் காந்திஜீயைக் குறைகூறிஞர்கள். நாட்டில் கிளர்த்தெழுந்த விடுதலைப் போராட்டத்தைக் கண்டித்தார்கள். நாட்டில் நாகரிகம் பரவுவதற்கும், ரயில் தந்தி தபால் போன்ற வசதிகள் ஏற்படுவதற்கும் வகை செய்து தந்த வெள்ளைக்காரனை வெறுப்பதும் விரோதிப் பதும் சரியல்ல என்று அவர்களில் பலரும் அபிப்பிராயப் பட்டார்கள். தேசபக்தி என்பதே இந்தியாவுக்குப் புதிய விஷயம்; பிரிட்டிஷார் வரலாறும் ஆங்கிலம் மூலம் நமக்கு அறிமுகமாகியுள்ள உலக சரித்திரமும் கற்றுத் தந்த புதிய உணர்ச்சியே அது: சிதறிக் கிடந்த சிற்றரசுகளின் பரஸ் பரப் போராட்டமும் போட்டியும் பொருமையும் காட்டிக் கொடுத்தலும் அடிமைப்படுதலுமே இந்திய நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் என்றும் அவர்கள் சொன்னர்கள். - "பார்க்கப்போளுல் இந்த விடுதலே இயக்கத்துக்கு அஸ்திவார மிட்டதே ஒரு வெள்ளையர்தான். இதை நாம் மறப்பதற்கில்லை' என்ருர் ஒரு பெரியவர். இருந்தாலும், மிஸ்டர் காந்தியை நாம் பாராட்டத் தான் வேண்டும். இந்த நாட்டினரின் மனுேபாவத்தை தன்முக உணர்ந்து கொண்டு செயல் புரிகிறவர் ஆவர். ஆத்மாவுக்கும் ஞானத்துக்கும் மதிப்பு அளிக்கிற நாடு இது. பொருளையும் உலக போகங்களையும் உடல் சுகங் களேயும் பெரிதுபடுத்தி, பூஜித்து வருகிற இ த ர நாட்டினர் இந்தியாமீது வியப்பும் மதிப்பும் காட்டு வசதிற்கே நம் நாட்டினரின் இந்தப் பண்பாடுதான் முக்கிய காரணம் ஆகும். சொத்து சுகம் பட்டம் பதவி செல்வம் அனைத்தையும் அலட்சியமாகக் கருதி, எந்தக் கனத் திலும் உதறி எறிந்துவிட்டு வெளியேறக் கூடிய மனநிலை நம்மவர்களிடம் சகஜமாகக் காணப்படுகிறது. இதை மிஸ்டர் காந்தி அரசியல் துறையில் லாபகரமாகப் பயன் படுத்த முனேந்தது, அவருடைய சாமர்த்தியத்தைக்