பக்கம்:வீடும் வெளியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் 盛翼 "தனிமனிதர்களைக் கொண்டது தானே சமூகம்? தனிநபர்களுக்கு சாத்தியமாகக் கூடியது சமூகங்களுக்கும் ஏன் பொருந்தாது? இப்போதே நாடெங்கும் எத்தனை எத்தனையோ பேர் பட்ட பதவிகளை உதறி எறிந்திருக் கிருர்களே. உத்தியோகத்தை, படிப்பை, சொத்தை எல்லாம் துறந்து விட்டு தேசப் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டிகிருர்களே? பிரபு மாதிரி வாழ்க்கை நடத்திய வர்கள் பலர் கஷ்டங்களே ஏற்றும், சிறையில் கிடந்து தண்டனை அனுபவிக்கவும் முன்வந்திருக்கிருர்களே? இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார்.

இதைக் காந்திஜீயின் ஆன்மபல வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். இந்த நாட்டுக்கே இயல்பான ஆன்ம வேட்கைக்கு காந்தியின் ஒளி நல்ல மருந்தாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். கால வேகத்தின. லும், உணர்ச்சிதுாண்டுதல்களிலுைம் புதுமைக் கவர்ச்சி பினுலும், ஊக்கத்தோடு செயலாற்றுகிரு.ர்கள் மக்கள். இவர்கள் எல்லோரும் லட்சியக் கொள்கைககளின் புனிதத்தைப் புரிந்துகொண்டு, உளமாற அவற்றை வாழ்க்கை தர்மங்களாக வரித்துக்கொண்டு விட்டனர் என்று முடிவு கட்டிவிடலாமா என்ன? உதாரணத்துக்கு ஒன்று கூறலாம். சத்தியமே கடவுள் என்று அறிவிக் கிறர் காந்தி. கடவுளே சத்தியம் என்று நான் சொல்லி வந்தேன்; அதை மாற்றி, சத்தியத்துக்கே உயர்வும் முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும் என நான் உணர்கிறேன்; அதல்ை, சத்தியமே கடவுள் என்று வற்புறுத்துகிறேன் என்று காந்தி கூறுகிரு.ர். சத்தியத்துக் காக எவ்வளவோ சிரமங்களை அனுபவித்த அரிச்சந் திரனின் கதையால் வசீகரிக்கப்பட்டவர் அவர். அவர் வேண்டுமானல், அரிச்சந்திரனைப் போல், சத்தியத்துக் காக எல்லா விதமான சோதனைகளையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் எதுவரினும் சத்தியத்தை விட்டுக் கொடுக்காத சீலர் களாக விளங்குவர் என்று எதிர்பார்க்க முடியுமா? மனித பலவீனங்களை உணர்ந்தவர்கள் அவ்விதம் எதிர்பார்ப் பார்களா என்ன? காந்தியின் லட்சியக் கொள்கைகளான