பக்கம்:வீடும் வெளியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ஆ வீடும் வெளியும் திருநகரில் பாம்பே ஷோ என்ற பெயரில் ஒரு வெளிச்ச விளம்பர, தடபுடல் கேளிக்கை காட்சி முகாமிட்டிருந்தது. இரவு நேரம் அந்த இடமே கோலா கல பூமியாக மாறிவிடும். என்ன கும்பல்! எவ்வளவு: மினுமினுப்பு ராட்டினங்களும், சர்க்கஸ் வித்தைகளும் அதில் காணப்பட்டன. முக்கியமாக, பணம் பறிக்கும் விளையாட்டுக்கள் நிறையவே இருந்தன. கலக்கீ பிரைஸ்: வை. ராஜா வை:!’ என்று ஓயாது எழும் கூச்சல் மன அரிப்புக்கொண்டவர்களே, சுலபமாகப் பணம் பண்ணிவிடலாம் என்ற நப்பாசை உடைவர்களே, அப்பாவிகளை எல்லாம் சுண்டிச் சுண்டி இழுத்துக் கொண்டிருந்தது. 'லக்கீ புளு சிங்கில் எல்லோ! டபுள் கிரீன் ' என்து ஒரு ஆள் மந்திரம்போல் கவர்ச்சிக் குரலில், ஏதேதோ கத்திக் கொண்டிருந்தான். பணம் கட்டுகிறவர்கள், கட்டுகிற பணம் குட்டிகளைப்போட்டு பெரிசாக வந்து சேரும் என்ற ஆசையோடு, சில்லறை க: யும் நோட்டுகளேயும் கொட்டிக் கொண்டிருந்தார். கள்: பணம் பறந்து போனது. - வை. ராஜா வை: அதிர்ஷ்டம் இருந்தால், தரித்திரம் ஒரு மண்ணையும் பண்ணி விடாது. யோக் வ:ன் கல்யாணத்தில் பல்லக்கேறுவான்; செத்தால் பாடை ஏறுவான்: வை. ராஜா வை' என்ற மந்திரக் குரல் திருமலையையும், அவனுடைய சகாக்களையும் சுண்டி இழுத்தது. போளுர்கள், விளையாடினர்கள், பணத்தைப் பறி கொடுத்தார்கள். மேலும் ஆடினர்கள். பணம்தான் குறைந்தது. - "இது வுெறும் சூதாட்டம். நமக்குச் சரிப்படாது!" என்று நண்பர்கள் நழுவி விட்டார்கள். திருமலை சூதாடுவோனுக்கே உரிய வெறியுடன், மயக்கத்துடன், ஆடினன். விளையாடிக் கொண்டே யிருந்தான். கைப் பணம், சேர்ந்த பணம், எல்லாப் பணமும் போப் விட்டது.