பக்கம்:வீடும் வெளியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 等警 செய்வதோடு, தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து வந்தார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆங்கிலத்துக்கே முதலிடம் இருந்தது. ஆ ங் கி ல ம் கற்பிக்கிறவர்களே அதிக மரியாதை பெற்ருர்கள். ஆங்கிலம் படித்துப் பட்டம் பெற்றவர்களே சமூகத்திலும், நாட்டிலும் உயர்ந்தவர் களாக மதிக்கப்பட்டார்கள். இவை எல்லாம் அவனுக்கு உடன்பாடான விஷயங்கள் அல்ல. ஆட்சி புரிகின்ற அந்நியரின் மொழி நாட்டிலே செல்வாக்குப் பெற்று விட்டது. நர்ட்டு மக்களே அடிமைப்படுத்தவும், அவர்களுடைய அறிவு வளர்ச்சிக் குத் துணை புரியும் சாக்கிலே அடிமைப் புத்தியை வளர்க் கவும் ஆங்கிலேயர் கல்வி முறையை அமைத்து விட்டார் கள் என்று அவனுக்குப் பட்டது. அரசாங்க இயந்திரம் சீராக இயங்குவதற்கு வகை செய்வதற்காக ஏகப்பட்ட குமாஸ்தாக்களையும், கீழ்தர உத்தியோகஸ்திர்களையும் தயாரித்து விடும் நோக்கத்துடன்தான் ஆங்கிலேயர் கல்வித் திட்டம் வகுத்திருக்கிரு.ர்கள் என்ற கூற்றின் உண்மையை அவனும் உணர்ந்தான். பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும், சேர்ந்து படிக்கிறவர்களில் பெரும்பாலோர் அறிவு வளர்ச்சி பெற வேண்டும் என்ருே, ஆராய்ச்சித் துறைகளில் ஈடு படவேண்டும் என்ருே ஆசை கொண்டு, அல்லது லட்சி: வேகத்தோடு செல்லவில்லை. படித்துப் பட்டம் பெற்ருல் கல்ல உத்தியோகம் கிடைக்கும் என்றும், பணம் நிறையச் சம்பாதிக்கலாம் என்றும் எண்ணியே அவர்கள் செயல் புரிகிரு.ர்கள். அதஞல் அவர்கள் ஆங்கிலத்தையே பெரிதாக மதிக்கிரு.ர்கள். அந்நிய மொழியில் மோகம் கொண்டு, தாய் மொழியை அலட்சியப் படுத்துகிரு.ர்கள். மாணவர்களின் இந்த மனுேபாவத்தைக் காந்தி வெறுத் தான். ஆங்கிலம் சாதாரண மக்களாலும் உயர்வாக மதிக் கப்படுகிறது. புரிந்தும் புரியாமலும், அவசியத்தோடும் அவசியம் இல்லாமலும், பலரும் ஆங்கிலத்தை உபயோ கிக்கிருர்கள். அப்படிச் செய்வதைப் பெருமையாகவும்