பக்கம்:வீடும் வெளியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் §7 பக்கம் தீப்பொறி பறக்கும். அப்படி வேகமான எண் ணங்களை என் எழுத்து தாங்கி.வரும். நீ வேண்டுமான லும் அந்தப் பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றலாம” என்று நடராஜன் அறிவித்தான். வந்ததுபோலவே திடீரென்று போய்விட்டான் அவன். எங்கே போனன், அவன் எங்கிருந்து பத்திரிகை நடத்தத் திட்டமிட்டிருக்கிருன் என்பது எதுவும் காந்திக்குத் தெரிய வழி இல்லாமல் போய்விட்டது: 19. மாறும் மனிதர்கள் வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக அமைவதில்லை. தனி மனிதர்களின் வாழ்வைக் கவனித்தால், இன்பங்களை விடத் துன்பமே மிகுந்திருப்பது தெரியும், சுக செளகரி யங்களேவிட சிரமங்களும் நெருக்கடிகளுமே அதிகம் உற வாடுகின்றன என்பதும் விளங்கும். சாதாரண மனித வாழ்வு முறையிலேயே இந்த நிலைமை என்ருல், பொதுவான-கால ஓட்டத்தில் ஒழுங் கானது, சமூக நியதி எனப் படிந்துவிட்ட-ஒரு போக்கி லிருந்து மாறுபட்டு, வழி விலகி அல்லது எதிர்த்துக் கொண்டு, செயல் புரியத் தொடங்குகிறவர்களின் வாழ்க்கைநிலை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? நாட்டின் விடுதலைக்காகப் பணிபுரிவது என்ற உணர்ச்சி வேகத்தோடும், லட்சிய வெறியுடனும் கிளம் பியவர்கள் எண்ணற்ருேர். அவர்கள் எல்லோருக்குமா வாழ்க்கை வசதிகள் நன்கு அமைந்திருந்தன? வீடு, செர்த்து, ககம் என்ற சகல செளகர்யங்களையும் பெற். றிருந்த பலர் தேச பக்தர்களாகி, தீவிரமாகச் செயல் புரிந்து, கஷ்டநஷ்டங்களே மகிழ்ச்சியுடன் ஏற்று, போராட்டத்தில் மேலும் மேலும் ஈடுபட்டு வந்தார்கள். குடும்பக் கவலைகளும் வீட்டுத் தொல்லைகளும் மிகுதியாக உடையவர்கள் பலரும் இவ்வேள்வியில் குதித்திருந்தார் கள். இழப்பதற்கு எதுவும் இல்லை நம்மிடம். நம்