பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

வீரத் தலைவர் பூலித்தேவர்



4 வீரத் தலைவர் பூலித்தேவர் குமரிக்கு மேற்கே முப்பது மைல் விரிவுள்ள நிலப் பகுதியும் அப்பகுதியில் இருந்த கோட்டை கொத் தளங்களும் ஒருங்கே கிடைத்தன. இேரண்டாயிரம் சிப்பாய்களையும் ஐ ங் நூ று ஐரோப்பியர்களையும் கொண்ட கர்னல் ஹீரான் படை வரும் செய்தி கேட்டதும், பட்டாணியர்கள் இருந்த இடம் தெரியவில்லை. மதுரை மாநகரம் கும்பினிப் படையிடம் சிக்கியது. மதுரையைப் பிடித் ததும் மமதை கொண்ட கும்பினி நவாபு பட்டாளம் தென்பாளையங்களில் கப்பப்பண வேட்டையில் இறங்கியது; பாளையக்காரர்களே மி ட் டி ய து; உருட்டியது. "அங்காளில் திருநெல்வேலிச் சீமை ஒரு வகை யில் இரு வேறு பிரிவாய் இருந்தது. அப்பிரிவுகள் ழ்ேத்திசைப் பாளையங்கள் என்றும், மேற்றிசைப் பாளையங்கள்’ என்றும் பெயர் பெற்றன. கீழ்த் திசைப் பாளையங்களுக்குத் தலைமை தாங்கியவர் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் பொல்லாப் பாண்டிய நாயக்கர் என்பவர். இவரே புகழ் பெற்ற வீரபாண்டியக் கட்டபொம்மன் பாட்டனுர். இவர் பாஞ்சா லங்குறிச்சியில் (கி.பி. 1736 முதல் கி. பி. 1760வரை) இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்."A அப்போது மே ம் றி ைச ப் பாளையங்களுக்குக் தலைமை தாங்கியவரே பூலித்தேவர். அந்நாளில் இவர் உறைவிடம் நெற்கட்டுஞ் செவ்வல் என்று வழங்கப்பட்டது. இப்பொழுது சங்க ர நயினர் கோயில் தாஅாக்காவில் ஆவுடையாபுரம்" என்று வழங்கப் பெறுவதும் இவ்வூரே.