பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

3



வீரத் தலைவர் பூலித்தேவர் 3. சேரும்படியும், சேர்ந்தால் பழம்பாக்கிகளே எல்லாம் ரத்துச் செய்வதாகவும் நாளும் நயவுரைகள் பகர்ந்து வந்தான். இதையொட்டிச் சந்தாசாகிபுவின் கண்ப னை ஆலம்கான் மதுரையைக் கைப்பற்றித் திரு நெல்வேலிச் சீமையில் கப்பம் வசூலிக்கத் தொடங் கின்ை. இவற்றையெல்லாம் பார்த்துப் பதறிய ஆர்க்காட்டு நவாபு கிழக்கிந்தியக் கும்பினியின் கருணக்கு மனுப்போட்டான். அத்தகைய சந்தர்ப் பத்தையே எதிர்பார்த்திருந்த கும்பினியும், கர்னல் ஹீரான் என்பவனே உதவிக்குக் கொடுத்தது. ஆர்க்காட்டு நவாபுவின் அண்ணன் மாபூஸ்கான்,' கர்னல் ஹீரான், கான்சாகிபு ஆகியோர் தலேமை யில் படை புறப்பட்டது. கர்னல் ஹீரான் என்ற வெள்ளை யனை முக்கியத் தளபதியாகக் கொண்டு, கி. பி. 1 55ல் நடை பெற்ற இப்படையெடுப்பே சுதந்தர தாகம் கொண்டிருந்த தென்சீமைகளை அடக்க எழுந்த முதற்பெரும்படையெடுப்பு. "இரண்டாயிரம் சிப்பாய்களையும் ஐந்நூறு ஐரோப்பி யர்களேயும் கொண்ட இப்படையெடுப்பு, தென்திசை நோக்கிச் சென்றிருந்த போது, இடைக்காலத்தில் ஆலம்கால்ை பிடிக்கப்பட்டிருந்த மதுரை மாநகர், மியான, மூடேமியா, நபிகான் என்ற மூன்று பட் டாணியர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப் பட்டாணியர்கள், ஆடவர் எனப் பெயர் கொண்டு திரிந்த பேடிகள் ; காசாசை கொண்ட கயவர்கள்; பணப்பித்துக் காரணமாக நாடு நகர், கோட்டை கொத்தளம் எல்லாவற்றையும் விற்கத் துணிந்த வர்கள். அதன் விளைவாகவே அந்நாளில் திருவாங் 5_6)jT ஆண்டமார்த்தாண்ட வர்மருக்குக் கன்னியா