பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

45



ஒரு பெரும்படையைக் கொண்டு பூவித்தேவரின் படையைத் தாக்கினன்; ஆனால், கோட்டைக்குள் இருந்த படைஞர் கூட்டம் பூலித்தேவரின் வெற்றி யால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தது; வெற்றி ஆா வாரம் புரிந்தது; வெண்சங்கம் ஊதியது. இங் நேரத்தில் எல்லா மறவரும் சொல்லி வைத்தாற் போலக் காடுகளிலிருந்து திரண்டு பாய்ந்து வந்தனர்; பல்வேறு கூட்டங்களாகப் பிரிந்து பல்வேறு இடங் களிலும் தாக்கினர். கான்சாகிபு படை துரத்தத் துரத்த, அவர்கள் மேலேறிச் சாடினர்கள். அவர்கள் உள்ளத்தின் உறுதி காரணமாக அன்று மாலே வரையிலும் கோட்டை பிடிபட்டுவிடாமல் காப்பாற் றினர். பொழுது சாய்ந்ததும் காட்டிற்குள் நுழைந்து மறுபடியும் கான் சாகிபு படையினரும் திருவிதாங் கூர்ப் படையினரும் கோட்டையைத் தாக்காமல் இருப் ப த ற்கான காரியங்களையெல்லாம் செய்யக் காத்திருந்தனர். ஆனால், தற்காப்புக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தளவாடங்கள் பெரும்பாலும் தீர்ந்துவிட்டன. அங்கிலேயில் கோட்டைக்கு முன் இருப்பது பெரிய ஆபத்து எனக்கருதிய கான்சாகிபு முற்றுகையைக் கலைத்துவிட்டு வெளியேறினன். அவனுடைய படையையும் திருவாங்கூரார் படையை யும் சார்ந்த 200 பேர் கொல்லப்பட்டனர். ஆனல், எதிர்தரப்பில் இன்னும் பலர் இறந்தனர். மறுநாள் தான் சாகிபு சிறிது தாரம் வரை கூடச் சென்று திருவாங்கூர்ப் படையை வழியனுப்பி வைத்தான். அவர்கள் செங்கோட்டைக் கணவாய் வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்கள். கான் சாகிபு