பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 27 குறடு போல் பிடிக்குகிருன் அங்கே கோபமாய் ஊமைத் துரை தானும், # 650 சின்ன வீரலெக்க னென்ருெரு கம்பளச் சேருவைக் காரணிதி லொருவன், முன்னேறிக் கும்பினிப் பட்டாளஞ் சோஷரை முடுக்கிக் குத்தியே கொல்லுகிருன். பல் கடித்து உதட்டை மடிக்குகிருன் அடா மல் கெட்டவா என்று துடிக்குகிருன். வல்லையத்தால் குத்தியிடுக்குகிருன் கீழே மலத்தி மேலே இருக்குகிருன். கொழுப்பு கீழே சரியு தென்ருர் குடல் தெரியுதே ரத்தம் பரியு தென் ருர், 36 60 நெளிக்கும் உடல்களழியு தென்ருர் பழி நேரு தென்ருர் கழுகேறு தென்ருர், சின்ன வீரலெக்கன் செய்யும் சம்ரதாயத் தீர்க்கத்தை மூர்க்கத்தை என்ன சொல்வேன், என்ன சொல்வேனந்தச் சோஷர்களைக் குத்தி இழுத்து நிலத்திலே தான் போட்டு சோஷர் பிடரியில் கடிக்குகிருன் தலை குலுக்கி ரத்தங் குடிக்குகிருன். மீசை முறுக்கிக் கை எடுக்குகிருன் ரண வேட்டைகளாடிச் சண்டை பிடிக்கிருன். 36 70 கும்பினி சனத்தையும் அழிக்கிருன் எதிரி குத்துக்கும் வெட்டுக்கும் கெலிக்குகிருன். அம்புலிமான் போல குதிக்கிருன் சம்ர தாயத்திலடிக்கு கிருன் மைக்காரன் என்ருெரு கைக்காரன் துரை மன்னவன் சேவுக வில்காரன். விகிதக்காரன் சின்ன வீரலெக்கன் சண்டை வேடிக்கை பாருங்கள் நல்லோரே. தட்டாப்பாரை சின்ன கெட்டிக் காரன் வேட பட்டித்துரையொரு கைக்காரன். 3 680 வட்ட மிட்டாடிச் சிலம்புவரிசையில் கொட்டாப் புளி என்ருெரு ஆசாரி எட்டுப்பேர் சோஷரை எட்டுப்பேர் மேசரை எட்டியொரு குத்தினலே குத்தி