பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஊமைத்துரை வெள்ளேயர் போராடுவதன் உள் நோக்கத் தையும் தெரிந்துகொண்டான். வெள்ளையருக்குப் பஞ்சு விற்கக் கூடாதென்று, அவன் விவசாயிகளை வேண்டிக் கொண்டான். சிறிது காலத்திற்குக் கும்பினியாருக்கு இப்பகுதியிலிருந்து பருத்தி வாங்க முடியாமல் போய்விட்டது. அவர்களது வியாபாரத்தைத் தடை செய்ய அவர்களது துறைமுகத்தையும், பண்டகச்சாலையையும் கைப்பற்றிக் கொண்டான். வியாபாரத்திற்கும், அரசியல் ஆதிக்கத் திற்கும் உள்ள தொடர்பை அவன் அறிந்திருந்தான் என்று தோன்றுகிறது. கட்டபொம்மன் தனக்கு விரோதமான பகுதியினரைத் தன்ளுேடு சேர்த்துக் கொள்ள எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்று குறிப்பிட்டோம். ஊமைத்துரை குலசேகரன் பட்டணம் மூப்பன், மறுகால் குறிச்சி மறவர்கள் முதலியவர்களைத் தனது நண்பர்களாகச் சேர்த்துக் கொண்டான். மறுகால் குறிச்சி மற வர்கள் தென் பகுதியில் காவல் உரிமையைப் பெற்றிருந்தார்கள். வெள்ளையர்கள் ஆட்சியில் அவ்வுரிமையை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதல்ை அதிருப்தியுற்ற மறவர்களிற் சிலரைத் தனது தூதுவர்கள் போல் அமைத்துக் கொண்டான். பரமன் குறிச்சிப் பள்ளர்கள் நெசவுத் தொழில் செய்து பிழைத்து வந்தார் கள். வெள்ளேயரது வியாபாரச் சுரண்டலினல் அவர்களது தொழில் நசித்தது. அவர்ககளில் சிலர் வெள்ளேயரால் கொடுமைப் படுத்தப்பட்டனர். இதனுல் அதிருப்தியுற்றிருந்த பள்ளர்களையும் ஊமைத்துரை வெள்ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண் டான். வெள்ளேயரது நடவடிககையால் மக்களிடம் தோன்றி யிருந்த வெறுப்பு முழுவதையும், ஊமைத்துரை சரியானபடி பயன் படுத்திக் கொண்டான். எந்தக் கோணத்திலிருந்து வெள்ளை யர்கள்மீது வெறுப்படைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் தன் தலைமையின் கீழ் திரட்டுவதற்கு அவன் முயற்சி செய்தான். இவ்வாறு முதல் போராட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் பலவும், இரண்டாவது போராட்டத் தலைவர்களது முயற்சியினல் நிவர்த்தி செய்யப்பட்டன. ஆயினும் இரண்டாவது போராட்டமும் தோற்றுவிட்டது. அதற்குக் காரணமென்ன? பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் ஒரே தன்மையான சமூக அமைப்பில் இரு பிரிவினருக்குள் ஏற்பட்டது அல்ல. அதாவது ஒரு வலுவான பாளையக்காரருக்கும் வலுவற்ற பாளையக்காரருக்கும் ஏற்பட்டதல்ல. இச் சண்டைக் காலத்தில் சிதறிக் கிடந்த பாளையப்பட்டுக்களின் கீழ் நில