பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 3 ளிடம் நியாயம் கிடைக்கும், என்று அவன் 1798-ம் ஆண்டு வரை எண்ணியிருந்தான். அதனுல்தான் அவனிடம் வெள்ளேயரை எதிர்ப்பதில் சமரசப் போக்குகள் காணப்பட்டன. ஆனல் இரண் டாவது பாஞ்சாலங் குறிச்சிப்போர் நடந்தபொழுது மேற் குறித்த நிலைமைகளில் சிறு மாறுதல்கள் ஏற்பட்டன. முதல் போரில் கோட்டை அழிந்த பிறகு புரட்சித் தலைவர்கள் தங்கள் தோல் வியின் காரணங்களைப்பற்றிச் சிந்தித்தார்கள். மக்கள் ஆதரவு பலமாக இல்லாமல் வெள்ளேயரை எதிர்த்துப் போராடுதல் கடினம் என்பதை உணர்ந்தார்கள். கட்டபொம்மன் தூக்கு மரத்தில் உயிர் நீத்த நிகழ்ச்சி அவ்வட்டாரத்தில் மக்களது அசிரத் தையைப் போக்கியது. கட்டபொம்மன் மீது அனுதாபம் ஏற்பட்டது. அவர்கள் மனத்தில் வெள்ளேயர்மீது வெறுப்பு வளர்ந்தது. இதற்குப் பின்வெள்ளேயரின் நேரடியான ஆட்சி தொடங்கியது. வரி வசூலிப்பதில் அவர்கள் கடுமையாக இருந்தார்கள். பருத்தி வியாபாரத்தில் தனி ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். விவசாயிகள் வெள்ளேயர்களிடமே பருத்தியை அவர்கள் வைத்த விலைக்கு விற்க வேண்டும். வியாபாரம் என்ற பெயரால் அவர்கள் விவசாயிகளைக் கொள்ளேயடித்தார்கள். தங்கள் நாட்டுச் செய் பொருட்களே இங்கே கொண்டு வந்து விற்பதில் போட்டி இருக்கக் கூடாதென்று நெசவுத் தொழில் போன்ற குடிசைத் தொழில்களே அழித்தார்கள். அதஞல் அவர்களின் சுரண்டல் கடுமையை மக்கள் அனுபவித்தார்கள். இந்த அனுபவம் அவர்களின் மனத்தில் வெள்ளேயர் மீது வெறுப்பை உண்டாக்கிற்று. இந்த மனமாறுதலே அறிந்த பின்பு தான் பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியிலுள்ள புரட்சித் தலைவர்களில் எஞ்சியிருந்தவர்களும், புதிதாக வெள்ளேயர் ஆதிக்கத்தை ஒழிக்க உறுதி பூண்டவர்களும் பாளேயங் கோட்டைக்குச் சென்று சிறையிலிருந்த ஊமைத்துரையை விடுவித் திருக்க வேண்டும். ஊமைத்துரை இவ்வாறு மாறிய சூழ்நிலையில் தான் சிறை மீண்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தான். மக்கள் வெள்ளையரை எதிர்க்க உறுதி பூண்டிருந்ததால் அவர்கள் உற்சா கத்தோடு செயலில் ஈடுபட்டனர். அவர்கள் ஆறு நாட்களுக் குள்ளாக முன்னிலும் பன்மடங்கு வலிமை வாய்ந்த கோட்டை யைக் கட்டினர்கள். மாறிய சூழ்நிலைகளில் கோட்டையை மட்டும் நம்பி ஊமைத் துரை இருந்து விடவில்லை. மக்களது வெள்ளையர் எதிர்ப்பை முழு வதும் திரட்ட அவனும் அவைேடு சேர்ந்த தலைவர்கள் செயல் படுத்தினர்கள்.