பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 6 கட்டபொம்மன் கொள்ளேக்காரன? தமிழ் நாட்டார் கட்ட பொம்மனை வெறுக்கத் தக்கவளுகத்தான் கருதவேண்டுமா? முன்னர் கூறியபடி நாயக்கர் ஆட்சி மறைந்த பின்னர் பாளே பக்காரர்கள் தங்கள் தங்கள் பகுதிகளை விஸ்தரித்துக் கொள்வு தற்கு முயன்றனர். இம் முயற்சியில் வலுவுடையவர்கள் வெற்றி பெற்றனர். மெலிந்தவர்கள் தோல்வியடைந்தனர். "வல்லவன் வகுத்ததே வாய்க்கால்” என்பது நியாயம் ஆகிவிட்ட காலத்தில், இவ்வாறு எல்லைகளை மாற்றியமைத்துக் கொண்ட பாளையக்கா ரர்கள் எல்லோரும், கொள்ளைக்காரர்களே. கட்டபொம்மனது முன்னேர்களும், கட்டபொம்மனும், ஏன், பூலுத்தேவரும் இதற்கு விதி விலக்கல்ல. இரண்டாவது, மக்களே கட்டபொம்மன் கொள்ளையடித்தாளு? கொள்ளை' என்பதற்கு என்ன பொருள் கொள்கிருேமோ அதைப் பொறுத்துத்தான் நாம் இக் கேள்விக்கு விடையளிக்க முடியும், தாங்கள் நடத்திய போர்களுக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்தது கொள்ளையென்ருல் இக் கொள்ளையைச் செய்யாத பாளையக் காரன் எவனுமே அக்காலத்தில் இல்லை. பூலுத்தேவரும். விவசாயிகளிடம் கடகை நெல்லைப் பெற்றுக் கொள்ளுவார் என்றும், அதனைத் திருப்பிக் கேட்க எவருக்கும் துணிச்சல் இரா தென்றும், இதனுலேயே அவரது தலைநகருக்கு தெல்கட்டான் செவல் என்ற பெயருண்டாயிற்று என்றும் நாடோடிக் கதைகள் பல வழங்குகின்றன. அதுபோலவே நாடார்களுக்குச் சொந்த மான பனமரங்களே கட்டபொம்மன் வெட்டிக் கொணர்வித்து மணிமாடங்கள் கட்டு வித்தான் என்ற கதையை முன்னர் குறிப் பிட்டோம். இவை யாவும் பாளையக்காரரின் சுரண்டல் தன்மை யைக் காட்டுகின்றன. இவை கொள்ளே யென்ருல், எல்லா பாளையக்காரர்களும் கொள்ளைக்காரர்களே. மூன்ருவது, கும்பினி ஆதிக்கமுள்ள இடங்களில் கட்டபொம்மு கொள்ளையடித்தான் என்னும் குற்றச்சாட்டு, எதிரிகள் ஆதிக்கத் திலுள்ள இடங்களில் கொள்ளையடித்து அங்குள்ள பொருளாதார வாழ்வைச் சீர்குலப்பது எக்காலத்திலும் போர்க்காலத்தில் வழக்க மாயிருந்து வந்திருக்கிறது. பூலுத்தேவரும், கட்டபொம்முவும், ஊமைத்துரையும், மருது சகோதரர்களும் துணிச்சல் மிக்கவர்கள். மற்றபாளையக்காரர்கள், தங்களைக் கொள்ளையிட்டு வெள்ளேக் காரர்கள் சேமித்துவைத்து இருக்கும் பண்டங்களே. கேட்கவே அஞ்சினர்கள். ஆனல் இவ்வீரர்கள் வெ: களது களஞ்சியங்களைக் கொள்ளையிட்டார்கள், ! அக்காலத்தில் மக்கள் நினைக்கவில்லை. வரிவசூல் உரிமையில்லை என்று முழங்கிய யருக்கு