பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2) மூன்ருவதாக, சமூகக் கதைப் பாடல்கள் பல, வில்லுப்பாட்டா கவும், அம்மானையாகவும் வழங்கி வருகின்றன. வில்லுப்பாட்டு களில் பெரிய பணக்காரரின் பேராசைக்கு ஏழை உழைப்பாளிகள் பலியாவதும் ஜாதிக் கட்டுப்பாடுகளை, மீறி மணம் செய்து கொள் பவர்கள் ஜாதிக் கொடுரங்களுக்கு உள்ளாவதும், சொத்து உரிமை இல்லாத பெண்கள், கூட்டுக் குடும்பத்தில் படும் துன்பங்களும் கதைப் பொருளாக அமைந்துள்ளன, இவை தவிர, ஊராரின் நன்மைக்காக பயிர்களைக் கொள்ளை போகாமல் பாதுகாத்த வீரர் களின் கதைகளும் கிராமத்தின் செல்வமாகிய ஆடுமாடுகளைக் கொள்ளை கொண்டு செல்பவர்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தவர்களது கதைகளும் பாடல்களாக வழங்குகின்றன. உயர்ந்த நல்ல நோக்கங்களுக்காக உயிர் விட்டவர்கள் கதைப் பாடல்களில் வீரர்களாகப் போற்றப் படுகிரு.ர்கள். கிராமப்புற உழைப்பாளி மக்களின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு இக்கதைப் பாடல்கள் மிகச் சிறந்த சாதனம். இப்பாடலைப்பற்றி கட்டபொம்மனைப்பற்றியப் பல பாடல்கள் கோவில்பட்டித் தாலுகாவில் கிராமங்களில் வழங்கி வருகின்றன. சில கிராமங் களில் அறுவடை சமயங்களில் கூத்தாடும் குழுவினர் எட்டுநாள், பத்துநாள் கிராமங்களில் தங்கி கட்டபொம்மன் கதைப் பாட்டுப் பாடி கூத்தாக நடிப்பார்கள். சில குழுக்கள் முழுவதும் தமிழ்நாட்டுப் பாடல்களாகவே பாடுவார்கள். வேறு சிலர் தெலுங்கும் தமிழும் கலந்த பாட்டுக்களைப் பாடு வார்கள். பொதுவாகப் பெண் கதாபாத்திரங்களின் கூற்றுக்களே தெலுங்குப் பாடல்களாகவும், ஆண் கதாபாத்திரங்களின் பேச்சுக்களை தமிழ்ப்பாடல்களாகவும் பாடுவார்கள். இவ்விருவகை நாட்டுக் கதைப் பாடல்களையும் தேடிக் கண்டு பிடித்து இங்கு வெளியிடுகிருேம். இதற்கு முன்னர் கட்டபொம்மனப்பற்றிய கதைப்புடலே நான் பதிப்பித்திருக்கிறேன். அதனை 1982ல் நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டார் பதிப்பித்திருக்கிருர்கள். இவ்விரண்டு கதைகளும் என்னிடம் இரண்டாண்டுகளாக இருந்தன. இவற்றை வெளியிட ஆர்வத்தோடு முன்வந்த மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர், தெ.பொ.