பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

座8 தேசத்து முந்திரிச் சாராய மதில் செய்திடும் கோதும்பை ரொட்டிகளும் போதாவாகவே தானும் வைத்துக் காணல் பூரித்து மெள்ளச் சலாமுஞ் சொல்லி சாதித் துரையான சாகிசன் மேசரும் சந்தோட்டியாய்ச் சொந்தம் பாராட்டி கோட்டைக்குக் கர்னல் விட்டன் துரையுடன் கடி அளப்புகள் பேசுவாராம் நாட்டிலே கோட்டை களென்ன வென்ருர் பாஞ்சை நாட்டை ஒடுக்கிடவேணு மென்ருர் 880 கையைக் கடித்து உதறிக் கொண்டார் துரைகள் காதில் ரகசியம் பேசிக் கொண்டார் வையகத்தில் துரை கோபமுற்ருர் பாஞ்சை மன்னன் மேலைவர்மம் மனதில் வைத்தார் கெக கெக கென்று சிரித்துக் கொண்டார் துரை கீ கீ கீ யென்றங்கே பேசிக் கொண்டார் சக்கரம் போலே வளைந்திருக்கு மெட்டுத் திக்குத் திசைகள திரும்படி யெட்டடி வேங்கை போல் சீறிடுவார் துரை பொட்டில்லா முகம் பார்த்துப் பாஷை சொல்வார் 890 கட்டபொம்மு வலு துஷ்டனடா நாமும் கண்டிப்புச் செய்யவே மாதரிச்சோத் தெற்குச் சீமைக்கொரு கட்டபொம்முத் துரை சின்ன நாவாபு போலிருக்கான் முக்கியமாகவே கட்டபொம்மு துரை மூர்க்க முள்ள பிரதானியுந்தான் ஏகாந்தமாகவே ஊமத்துரை யவர் யெக்களிப்பா யிங்கே வாருரே சாகத் துணிந்தவர் தன்னை மறந்தவர் சண்டைக்கு வந்தவர் போல்வாருர் 900 சேனை தளங்கள் அநேகமதாய் பிர தானி முறுக்கு விரோதங்களாய் ஆனை மேல் பேரிகை தான் முழங்க வெகு சேனை தளங்கள் படை நெருங்க கும்பினி ஒழுங்கு தப்பிச் சென்று வலு கொள்ளைக்காரன் போலவே துள்ளிக் கொண்டு