உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

வீரர் உலகம்

போட்டு வேய்ந்திருக்கிறார்கள். கூதிர்ப் பருவம் ஆதலின் சிறுசிறு துளிகளை வீசுகிறது வானம். உடல் நடுங்குகிறது. வீரர்கள் தம் தம் கூடாரத்தில் ஒடுங்கியிருக்கிறார்கள். இந்தக் குளிரால் நடுங்கியும் அரசன், நினைத்தால் போய் வரத் தேரைப் படைத்தவன், தன் மனேவியைப் போய்ப் பார்த்து வரவேண்டும் என்று நினைக்கவில்லை. இவன் வீரம் இருந்தபடிதான் என்னே!’ என்று வியந்து படும் பாட்டு ஒன்று வருமாறு.

"கவலை மறுகிற் கடுங்கண் மறவர்
உவலைசெய் கூரை ஒடுங்கத்–துவலைசெய்
கூதிர் நலியவும் உள்ளான், கொடித்தேரான்,
மூதில் மடவாள் முயக்கு!”[1]

[கவலே-சிக்கலான வழி. மறுகு-தெரு. கடுங்கண்கொடுமை. மறவர்-வீரர். உவலே-தழை. துவலை-சிறிய துளி. மூதில்-பழைய அரண்மனே. முயக்கு-சேர்தல்.]

இப்படியே, சலார் சலார் என்று வாடைக் காற்று வீசவும் மனம் சலனமின்றி இருக்கிறான் என்று பாடுவது வாடைப் பாசறை என்னும் துறை. பத்துப்பாட்டு என்னும் சங்க நூலில் நெடுநல் வாடை என்ற நீண்ட பாட்டு இருக்கிறது. அது வாடைக் காலத்திலும் பாசறையில் இருந்து வீரம் மங்காமல் விளங்கிய பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது.

வாடையினால் மக்களுக்கும் பிறருக்கும் உண்டாகும் துன்பத்தையும், பாசறையில் அரசன் போரில் புண்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு உலவுவதையும், அரண்மனையில் அவனுடைய மனைவி அவனே எதிர் நோக்கி வாடியிருப்பதையும் நெடுல்வாடை அழகாகக் சொல்கிறது.


  1. 1. புறப்பொருள்-வெண்பா மாலை, 169,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/121&oldid=1848102" இலிருந்து மீள்விக்கப்பட்டது