13. பாசறையில்
115
மழை பெய்தமையால் எங்கும் குளிர் படர்கிறது. மக்களின் பற்கள் குளிரினால் பறையடிக்கின்றன. நெருப்பிலே கையைக் காட்டிக் காட்டி அந்தச் சூட்டைக் கன்னத்தில் ஒத்திக் கொள்கிறர்கள், ஆடும்மாடுகள் மேயப் போகாமல் அப்படி அப்படியே நின்று விடுகின்றன. குரங்குகள் கையைக் கட்டிக் கொண்டு குந்தியிருக்கின்றன. பறவைகள் சிலீர் சிலீர் என்று வீசும் வாடைக் காந்துத் தாங்காமல் மரங்களிலிருந்து கீழே விழுகின்றன. கன்று ஊட்டப் போனுல் . மாடு அதை உதைக்கிறது. கதிர்க் காலத்துக் குளிர் குன்றையே கடுங்கச் செய்துவிடும் போலத் தோன்றுகிறது.
இந்தப் பருவத்தில் முசுட்டை பூக்கிறது; பீர்க்கும் பொன்போல மலர்கிறது. கொக்குகளும் காரைகளும் ஈரமான மணலில் நின்றபடியே நீரில் ஒடும் கயல் மீனைக் கொத்துகின்றன. வெள்ளேயாக உள்ள மேகங்கள் வானம் எங்கும் பரவிச் சிறு சிறு துளிகளாகத் தூவுகின்றன.
நெல் வயல்களில் கதிர்கள் முற்றி வளைந்து நிற்கின்றன. கமுகங் குலைகள் நன்றாக முற்றுகின்றன. சோலேகளில் மரக்கொம்புகளிலிருந்து சொட்டுச் செட்டென்று மழைத் துளிகள் சொட்டிக்கொண்டிருக்கின்றன.
நகரத்தின் தெருக்களில் நீர் ஓடுகிறது. ஆறுகள் கிடந்தாற்போல் அவை தோற்றம் அளிக்கின்றன. உடல் வலிமையை உடைய அயல்நாட்டு மக்கள் கள்ளை உண்டு மழைத்துளிக்கு அஞ்சாமல் அங்கும் இங்கும் திரிகிறார்கள். வீடுகளில் உள்ள மகளிருக்குப் பொழுதே தெரியவில்லை. வானம் முடிக் கிடக்கிறதுதான் காரணம். அவர்கள் பிச்சி யரும்புகளைப் பறித்துத் தட்டில் வைத்திருக்கிறார்கள். அவை குப்பென்று மலர்கின்றன. அதைக் கண்டு பகற்காலம் கடந்துமாகி வந்துவிட்டதென்பதை அவர்கள்