பக்கம்:வீர காவியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

மகப்பெறு படலம




பெண்பிறவா தெனும் நினைவோ? யாரே கண்டார்?
பிறந்துவிடின் என்செய்வை? ஆணுே பெண்ணுே கண்மணி போல் நாம் வளர்ப்போம்; கட்டிக் காப்போம்;
காலமினும் ஐந்தாறு திங்க ளுண்டு நண்பகலில் கனவெதற்குப் பிறகு பார்ப்போம்!'
நங்கையிவை மொழிந்தவுடன் வேழன் சொல்வான் மண்புகழும் பெரு வீரன் எனக்கு மைந்தன்
மாவீரன் தான்பிறப்பான் ஐய மில்லை. 187
பெரும்படையை எதிர்நின்று பொருது வென்ற
பேராற்றல் கண்டுலக வீரன் என்று தரும்பெயரைப் பெற்றுள்ளேன்; இந்நாள் மட்டும் தருக்கிஎதிர் வருவோரைக் கானு கில்லேன்; அரும்புகழைப் பெரும்விருதைப் பிறருக் காக்க அணுவளவும் ஒவ்வேனென் பரம்ப ரைக்கே வரும்படி.நான் செய்வதுதான் கடனும் ஆகும்;
வளர்கின்ற நின்கருவும் ஆனே' என்ருன். 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/102&oldid=911158" இலிருந்து மீள்விக்கப்பட்டது