பக்கம்:வீர காவியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வீரகாவியம்

104


என்னுஞ்சொற் செவியுறலும் மலர்வி ழிக்குள்
இருக்கின்ற புனலெல்லாம் சோர விட்டாள்; வன்னெஞ்சன் தோள் தழுவி விரிந்த மார்பில்
மலர் முகத்தைப் பதியவைத்து விம்மி நின்ருள்; கன்னெஞ்சன் எனினுமவன் காதற் செல்வி
கண்ணிரால் கரைந்திளகி இரக்கங் கொண்டு, 'மின்னுஞ்சேல் விழியுடையாய் என்ன கண்டு | விம்முகின்ருய் வெம்புகின்ருய்? நிமிர்க!' என்ருன். 199
மென்புறத்தைத் தைவந்து, கையி ரண்டால்
மெல்லியலைக் கைப்பற்றி, அவள்மு கத்தைத் தன்விரலால் மேல்நிமிர்த்திப் பிரிவை நெஞ்சம்
தாங்காமல் கண்பொழியும் நீர்து டைத்தான்; அன்புதவழ் இருவிழியால் அவளை நோக்கி
அலர் பொதியும கார்குழலைக் கோதி விட்டான்; தன் புதிய வாழ்வுக்குத் துணையாய் நின்ற
தையலுக்குக் கனிமொழிகள் பலவு ரைததான். | 200
சேல்-கயல்மீன் தைவந்து-தடவி, கார்குழல்-கரியகூந்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/107&oldid=911168" இலிருந்து மீள்விக்கப்பட்டது