பக்கம்:வீர காவியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

128


'இத்தனைநாள் இவற்றையெலாம் என்பாற் சொல்லா தேன்மறைத்தீர்? இதற்கென்ன சொல்வீர்! என்ருன்; 'வித்தகன்மா வேழற்கு மகன் நீ என்று வேந்தனவன் பெருங்கனகன் அறியு மாயின் எத்துயரும் விளைத்திடுவன் நினக்கென் றெண்ணி ஈதறியா வண்ணமுனை வளர்த்தோம் ஐய! அத்தனை நீ அறிகுவையேல் ஈங்கு வேந்தன் அறியும்வகை பரவிவிடும் அதனுல்' என்ருள் 255 "மாவேழன் மகனு நான் அம்மா! அம்மா! மாவீரன் பெற்றெடுத்த மைந்தன் என்ற நாவாழ்க வாழ்க’எனக் களித்து நின்று, "நானிலத்துப் பெருமறவன் பெற்ருன் என்று கோவேந்தன் அறிந்தாலென்? குற்ற மில்லை; கூறவொனப் பெருமையலால் இழிவொன் றில்லை; சாவாத புகழுடையான் பெற்ற பிள்ளை தகவுடையன் தனிமறவன் என்ன வாழ்வேன். 256 பாருலகம் ஏத்துபுகழ் படைத்த வீரன் பாலன் என இத்தனைநாள் காண வாராக் காரணமென்? வியப்பன்ருே? ஒருகால் என்றன் கவலைக்கு மருந்தாகப் பொய்ம்மை யாக ஆறுதலை மொழிந்தனையோ? உண்மை சொல்ல அறியாயோ? மனமிலையோ? ஈத னைத்தும் யாருடைய கற்பனையோ? நம்பும் வண்ண ம் யாதொன்றும் புகலாயோ? அன்னுய்' என்ருன் . 257

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/131&oldid=911222" இலிருந்து மீள்விக்கப்பட்டது