பக்கம்:வீர காவியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

காட்சிப் படலம்

இயல் 1

முனைப்பாலும் நினைப்பாலும் பகைமை விஞ்சி
மூவகமும் நாவலமும் முரணி நிற்கும்.

விண்தொட்டு முகில்மணந்த மலைமு கட்டின்
      வெண்ணிறத்துப் பனித்திரள்கள் உருகி நீராய்ப்
பண்பட்ட இசையெழுப்பி அருவி யாகிப்
      பாறையெலாம் முழவொலிக்கப் பாய்ந்து வீழ்ந்து
மண்தொட்டுச் சென்றுநில மகளைக் கூடும்;
      மனமகிழப் பொன்கொழித்து வளங்கள் காட்டும்;
தண்ணிட்டு லிரைந்துசெலும் புனலா றென்னும்
      தனிப்பெயரைத் தாங்குமது வையங் காக்கும்.1

காக்கின்ற புனலாற்றின் தென்பு றத்தே
      கடிமதில்சூழ் மூவகமென் றொருபேர் தாங்கும்
தேக்குபுகழ்த் திருநாடுவிளங்கித் தோன்றும்;
      திசையெட்டும் அந்நாட்டை வணங்கி நிற்கும்;
பூக்கின்ற மலர்தோய்ந்து தென்றல் வீசப்
      பொழிநறவந் திரண்டோடும் பொழில்கள் சூழும்;
தேக்குமணி மாளிகைகள் நிவந்து நிற்கும்
      தெருவனைத்தும் நீண்டகன்றே எழிலைக் கூட்டும்.2

.........................
தண்ணிட்டு-குளிர்ந்து நறவம்-தேன். நிவந்து உயர்ந்து.

தடிமதில்-காவல் பொருந்திய மதில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/14&oldid=1354165" இலிருந்து மீள்விக்கப்பட்டது