பக்கம்:வீர காவியம்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

மகப்பெறு படலம்


இயல் 68 தையல் அவள்தான் தப்பிப் புகுந்தாள் மையல் கொண்டோன் வஞ்சினம் மொழிந்தான் ஓங்குநிலைப் பெருவாயிற் கோட்டை முன்னர் ஓடிவரும் மானத்தி நிலைமை கண்டே ஆங்குறுவோர் பெருங்கதவைத் திறந்து விட்டார்; அரிவையத னுட்பாய்ந்து புகுந்து கொள்ள வீங்குநெடுங் கதவதனை மூடிக் கொண்டார்; வீரமகன் அதுகண்டு வெளியில் நின்றே ஏங்குமனத் துயரத்தைத் தாங்கி நின் ருன்: ஏமாற்றம் பெற்றமைக்கு நாணி நின்ருன். 51() உட்புகுந்த அம்மகளும் மதின்மே லேறி ஒருமகளுய் நிற்போனை விளித்து நோக்கிக் கட்கமுடன் நிற்போய்நின் நாடு நோக்கிக் கடிதுவிரைந் தோடுக.நீ!' என்ருள் மங்கை; வெட்கமுடன் பெருஞ்சினமும் கொண்ட காளை விரகுபுரிந் தெனைப்பழித்தாய்! பிழைத்தாய்! நாளை மட்புகுந்து தூளாகும் நினது கோட்டை மாயத்தாய்! நின்னுடலும் கரியாம் தீயில். 311 கட்கம்-வாள். விரகு-தந்திரம்.