பக்கம்:வீர காவியம்.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

196


இயல் 91 ஒருவரை ஒருவர் உணரா தெதிர்ந்தவர் உருவையும் பொலிவையும் உவப்புடன் வியந்தனர். பொருதொழிலைத் தொடங்குமுனம் களத்து நின்று புதுவதுபோல் ஒருவரைமற் ருெருவர் பார்த்தார்; ஒருபெரிய வடிவமொடு நிமிர்ந்து நிற்கும் உருக்குடலும் துதிக்கையெனத் திரண்டு ருண்ட இருபெரிய நெடுங்கையும், பரந்த மார்பும், எழுகதிர்கள் இரண்டனைய விழிகள் தாமும் குருமருவு விரிநுதலும், ஒளிமு கத்தில் குவிந்தடர்ந்த சுருளணலும் இளைஞன் நோக்கி, 391 கண்டாலும் நடுக்குறுத்தும் தோற்றங் கொண்ட களிறனையான் இவனன்ருே வீரன் ஆவான் திண்டோள்கள் கொண்டிவனைப் பொருது வென்ற திறலன்ருே திறலாகும்; தோல்வி ஒன்று கண்டாலும் குற்றமில்லை; என்பே ராற்றல் காட்டுதற்குத் தக்கானும் இவனே யாகும்; விண்டாலும் இவன்தோற்றப் பெருமை எல்லாம் விரித்துரைக்க இயலாது விளைந்து நிற்கும்; 392 S SS SS TTTTTT TTTTT TTTTTTT TTT T S TS T S TST ST குரு - ஒளி துதல் - நெற்றி, அனல் - தாடி விண்டால் - சொன்கு ல்