பக்கம்:வீர காவியம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

போர்ப் படலம்


எனவியந்த கோளரியன் மனத்த கத்தே இவனுெருகால் தன்தந்தை வேழன் தானே? என நினைந்தான்; அவன் அணியும் கவச மில்லை; இவன்வேறு பிறன்போலும் எனத்தெ விரிந்தான்; கனவகத்தும் இவனைப்போற் கண்ட தில்லை; கற்பனைசெய் தாயினும் நான் பார்த்த தில்லை இணையபல வியந்தெண்ணி, ஆவ தாக! எனக்கரிய வாய்ப்பொன்று கிடைத்த தென்ருன் 393 இளவலுக்கு வாய்த்தஒரு வீரப் பாங்கும், எதிர்பொருவார் மனங்கவரும் எழில்வ னப்பும், பளபளக்கும் அவன்முகத்தில் தவழ்ந கைப்பும், பாய்ந்துவரும் அரிபோலும் அஞ்சா நோக்கும், களமுனைக்கு மதர்த்துவரும் பெருமி டுக்கும், கண்குளிரக் கண்டுளத்தில் மகிழ்ச்சி பொங்கும் அளவினுக்கோர் எல்லையில்லை; வலிய வேழன் அகமுருகி அவன்வயமாய் மொழிய லுற்ருன். 394 தேர்த்து - செருக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/200&oldid=911373" இலிருந்து மீள்விக்கப்பட்டது