பக்கம்:வீர காவியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

214


இயல் 103 மறுநாள் போர்செய வந்தமா வேழனை உசவோய்நீ யாரென உசாவினன் கோளரி. இன்றேனும் மாவேழன் வலிமை காண்போம் என நினைவான் போலெழுந்தான் கதிரோன் வானில்: என்றேனும் களரிதனில் தளர்வு காணு ஏற்றமுறு மாவேழன் வந்து நின்ருன்; நின்ருனைக் கண்டாற்கு முன்னுள் போல நெகிழ்ந்துள்ளம் பரிவுகொள அருகிற் சென்று "குன்றேறு போல் நிற்கும் முதியோய்! உண்மை கூறிவிடு! போர்வேண்டா; யார் நீ வீர! 424 எனை மீறி உன்பாலோர் அன்பு கொள்ள எழுமுணர்வை மனத்துடிப்பை அறியாய் ஐய! முனைவேழன் எனப்படுவோன் நீயோ? இன்றேல் முதுமையுறும் நின்பெயர்தான் யாதோ? வீணில் புனைபேரால் ஏமாற்ற முனையேல்! உண்மை புக் லுதியேல் வீண்போரே நமக்குள் இல்லை; தினையேனும் பகையின்றி நண்ப ளுவேன்; செப்புதிநீ யாவ'னென வணங்கிக் கேட்டான். 425 களரி-போர்க்களம். புகலுதியேல் - சொல்வாயானல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/217&oldid=911409" இலிருந்து மீள்விக்கப்பட்டது